நியூசிலாந்து செல்லும் சுற்றுலாப் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து NZ$25 – NZ$35 வரையிலான தொகையை வரியாக அறவிட நியூசிலாந்து அரசு தீர்மானித்துள்ளது. ஆனால் அவுஸ்திரேலியர்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அடுத்த ஆண்டு பிற்பகுதியிலிருந்து இம் முறையானது நடைமுறைக்கு வருகிறது என கூறப்படுகிறது.
அவுஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களுக்கும் Pacific Islands Forum நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இரண்டு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கும் இதிலிருந்து விலக்களிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாண்டு ஆரம்பம் முதல் ஏப்ரல் வரை 3.8 மில்லியன் சுற்றுலாப்பயணிகள், நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். இதில் 1.5 மில்லியன் பேர் அவுஸ்திரேலியர்கள் எனக் கூறப்படுகிறது.