குமரன்

மக்களுக்காகத் தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பேன்!- செந்தில் கணேஷ்

‘மக்களுக்காகத் தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பேன்’ என ‘சூப்பர் சிங்கர் 6’ பட்டம் வென்ற மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் ‘இந்து தமிழ்’ இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில், மக்கள் இசைக் கலைஞரான செந்தில் கணேஷ் பட்டத்தை வென்றுள்ளார். ஸ்ரீகாந்த், அனிருத், மாளவிகா, ஷக்தி, ரக்‌ஷிதா, செந்தில் கணேஷ் என 6 போர் பங்குகொண்ட இறுதிப் போட்டியில், முதல் பரிசை செந்தில் கணேஷும், இரண்டாவது பரிசை ரக்‌ஷிதாவும், மூன்றாவது பரிசை மாளவிகாவும் பெற்றுள்ளனர். ...

Read More »

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாங்களை அகற்ற முடியாது!-இராணுவத் தளபதி

வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்கத் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் சில பணிகள் தொடர்பிலும் அரசியல்வாதிகளாலும், ஊடகங்களிலும் பிழையான செய்திகள் வெளியிடப்படுவதாகவும், இதனால் நாட்டு மக்கள் மத்தியில், இராணுவம் தொடர்பிலான தவரான அபிப்ராயம் ஏற்படுவதாகவும் அவர் ஊடகங்ளுக்கு  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். “யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் இராணுவம் நிர்வாகக் கடமைகளுக்கு அப்பால் பல்வேறு அபிவிருத்தி மற்றும் சமூகப்பணிகளை மேற்கொண்டுள்ளது. பிரதானமாக நிர்வாக கடமைகளில் ஈடுபட்டுள்ள படையினர்களை அகற்றி அவர்களை வேறு கடமைகளுக்காக ...

Read More »

இமெயிலில் இமோஜிகள் தேவையா?

மின்னஞ்சல் பயன்பாட்டுக்கெனத் தவிர்க்க முடியாத விதிகளும் எழுதப்படாத விதிகளும் நிறைய இருக்கின்றன. அதிலும் அலுவல்ரீதியான பரிவர்த்தனை எனில், மின்னஞ்சல் விதிகளைத் தவறாமல் பின்பற்றுவது நல்லது. மின்னஞ்சலில் கோபத்தை வெளிப்படுத்துவது, ஆச்சரியக்குறிகளை அதிகம் பயன்படுத்துவது, ஒற்றை வரியில் பதில் அளிப்பது, உள்ளடக்கத்துக்குப் பொருத்தமான தலைப்பிடாமல் இருப்பது, ‘ரிப்ளை ஆல்’ வசதி மூலம் எல்லோருக்கும் பதில் அளிப்பது உள்ளிட்டவை மின்னஞ்சல் பயன்பாட்டில் தவிர்க்க வேண்டிய தவறுகள். இதேபோல, இரண்டு இணைப்புகளுக்கு மேல் அனுப்புவது, தனியே குறிப்பு இல்லாமல் அளவில் பெரிய கோப்புகளை இணைப்பாக அனுப்புவதும் மின்னஞ்சல் தவறுகளே. ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பிடிப்பட்ட 600 கிலோ முதலை!

அவுஸ்திரேலியாவில் 600 கிலோ எடையுள்ள முதலை ஒன்று சுற்றுலாத்தறை அதிகாரிகளால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.அஸ்திரேலியாவில் வடக்கு பகுதியில் காத்ரீன் ஆறு அதிக எடையுடன் கூடிய ராட்சத முதலை வந்தது. அந்த முதலை பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து வந்தது.5 மீட்டர் நீளமுள்ள அந்த ஆண் முதலை 600 கிலோ எடை உள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது. தற்போது அது முதலைகள் பண்ணையில் விடப்பட்டுள்ளன.

Read More »

காளான் வடிவ எல்.ஈ.டி விளக்குடன் 5 யுஎஸ்பி சார்ஜர்!

காளான் வடிவத்தில் எல்.ஈ.டி விளக்குடன், ஒரே நேரத்தில் 5 சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதி உடைய புதிய கருவியை ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. ‘ZEB-5CSLU3’ என்று பெயரிடப்பட்டுள்ள இதுல் போர்ட் டாக்கிங் (port docking) ஸ்டேஷனில், ஒரே நேரத்தில் 5 சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். சாதனங்களை அழகாக ஒழுங்குபடுத்தும் வகையில் இருக்க இது உதவுகிறது. காளான் வடிவ LED விளக்கு படுக்கை அறை விளக்கு போல எளிதாகத் தோற்றமளிக்கும். போன் அல்லது டேப்லெட்டில் பேட்டரி தீர்ந்துவிட்டால், உடனே சாதனத்தை இந்த 5 போர்ட் ...

Read More »

”பிஞ்சுக் கால்களின் முதல் நடையை என்னால் பார்க்க முடியவில்லை”!-டென்னிஸ் தேவதை

விம்பிள்டன் இறுதிப்போட்டி மீண்டும் ஓர் எதிர்பார்ப்பையும் அழுத்தத்தையும் செரினா மீது வைத்திருக்கிறது உலகம். 36 வயதில், குழந்தை பிறந்த பத்து மாதத்தில், 24-வது கிராண்ட் ஸ்லாமை வெல்ல களமிறங்குகிறார் டென்னிஸ் தேவதை. ”பிஞ்சுக் கால்களின் முதல் நடையை என்னால் பார்க்க முடியவில்லை. மீண்டும் களத்தில் என்னை நிரூபிப்பதற்காக பயிற்சியில் இருக்கிறேன். மழலையின் நடையைக்கூட பார்க்கமுடியாத தாயாகிவிட்டேன். என்னால் அழாமல் இருக்க முடியவில்லை” – நாளை விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ஏஞ்சலிக் கெர்பருடன்  விளையாட இருக்கும் செரினா வில்லியம்ஸ் பதிவிட்டிருக்கும் வார்த்தைகள்தான் இவை. எப்போதும்போல சறுக்கித்தள்ளவைக்கும் நெகட்டிவ் கமென்ட்டுகள் வந்தாலும், work – life பேலன்ஸுக்காக உழைக்கும்… உழைத்துக்கொண்டேயிருக்கும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் குடியுரிமைக்காக காத்திருக்க வேண்டிய காலம்….!

அவுஸ்திரேலியாவில் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள ஒருவர் காத்திருக்க வேண்டிய காலம் அதிகரித்துச் செல்கிறது. இதுகுறித்து குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் ஆலன் டட்ஜ் (Alan Tudge) விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்; குடியுரிமை கோரியவர்களின் விண்ணப்பங்கள் தற்போது 14-17 மாதத்திற்குள் பரிசீலிக்கப்படுகிறது என கூறியுள்ளார். பரிசீலனை செய்வதற்கு காலதாமதமாவதற்கு சில காரணங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 01. குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையானது 2010 முதல் 2018 வரையில் மூன்று மடங்காகியுள்ளது. 02. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் கடுமையான பாதுகாப்பு விதிகளின் ...

Read More »

கடைக்குட்டி சிங்கம்!- விமர்சனம்

80களிலும் 90களிலும் குடும்பம் என்ற அமைப்பைப் போற்றும் சினிமாக்கள் வரிசைகட்டி வெளிவந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு படத்திலும் ஒரு பாத்திரம் தியாகியாக இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவை சமீப காலமாக நகைச்சுவைப் படங்களும் பேய்ப் படங்களும் பிடித்து ஆட்டியதில் இந்த வகைப் படங்கள் இல்லாமலேயே போயின. இந்தப் படத்தின் மூலம் அந்த கடந்த காலத்திற்குள் கூட்டிச் செல்கிறார் பாண்டிராஜ். திரைப்படம் கடைக்குட்டி சிங்கம் நடிகர்கள் கார்த்தி, சாயிஷா, அர்த்தனா பினு, பிரியா பவானி, சத்யராஜ், சூரி, பொன் வண்ணன், விஜி, பானுப்ரியா, இளவரசு, சந்துரு, சரவணன் இசை ...

Read More »

கிளைமோர் பின்னணியிலேயே கர்ப்பிணி பெண்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோரியது!

கடந்த மாதம் 22 ஆம் திகதி ஒட்டுசுட்டான் பகுதியில் கிளைமோர் மற்றும் புலிகளின் சீரூடை, புலிக்கொடி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் ஒருவரை கைது செய்யவே மே மாதம் 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலத்தில் குழந்தை பெறும் நிலையில் இருந்த கர்ப்பவதிகளின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி தகவல்களை கோரி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினருக்கு அனுப்பிய கடித்தத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் ஊடாக நடைபெற்று ...

Read More »

காதலுடனும் நாம் புதிதாய்ப் பிறக்கிறோம்!

சிலி எழுத்தாளர் இஸபெல் அயந்தேயின் வரிகள் இவை: “ஒருவேளை காதலைத் தேடுவதற்காகவே நாம் இந்த உலகத்தில் இருக்கிறோம். மீண்டும் மீண்டும் காதலைக் கண்டடையவும், தொலைக்கவும்… ஒவ்வொரு காதலுடனும் நாம் புதிதாய்ப் பிறக்கிறோம். ஒவ்வொரு காதல் முடிவுறும் பொழுதும், ஒரு புதிய காயத்தைப் பெறுகிறோம். நான் பெருமைக்குரிய தழும்புகளைப் பெற்றிருக்கிறேன்.” பல ட்விஸ்ட்டுகளோடு கால்பந்தாட்ட உலகக் கோப்பை பயணித்துக்கொண்டிருக்கிறது. அர்ஜெண்டினா, பிரேசில் முதலான நாடுகளைக் கடந்து ரசிகர்கள் விரும்பும் அணிகள் தோற்றுப்போக, யாருமே எதிர்பார்க்காத அணிகள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி யிருக்கின்றன. ‘பெட்டிங் நடக்கிறது’, ‘கிளப் ...

Read More »