அவுஸ்திரேலியாவில் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள ஒருவர் காத்திருக்க வேண்டிய காலம் அதிகரித்துச் செல்கிறது.
இதுகுறித்து குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் ஆலன் டட்ஜ் (Alan Tudge) விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்;
குடியுரிமை கோரியவர்களின் விண்ணப்பங்கள் தற்போது 14-17 மாதத்திற்குள் பரிசீலிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
பரிசீலனை செய்வதற்கு காலதாமதமாவதற்கு சில காரணங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
01. குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையானது 2010 முதல் 2018 வரையில் மூன்று மடங்காகியுள்ளது.
02. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் கடுமையான பாதுகாப்பு விதிகளின் கீழ் பரிசீலிக்கப்படுகிறது. ஆகையால் விண்ணப்பம் கோருவரின் அடையாளங்களை இனங்கண்டு உறுதிப்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன.
03. சட்டவிரோதமாக படகுமூலம் புகலிடம் கோரியவர்களில் ஐம்பது ஆயிரம் பேருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்துள்ளது. அவர்கள் தற்போது குடியுரிமை கோரி இருப்பதினால் அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கான காலம் மற்றும் ஆளணி வளங்களின் தேவையுள்ளது.
இவை மற்றவர்களுடைய குடியுரிமை விண்ணப்பங்களை பாதிக்கிறது. ஆகவே இந்தக் காரணங்களே குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளவர்களின் காலத்தை அதிகரிக்கிறது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குரிய தீர்வினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.