குமரன்

அவுஸ்திரேலியாவில் 6 பேரை கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரத்தில் 2017ஆம் ஆண்டில் பாதசாரிகள் மீது வாகனத்தை மோதிய ஓட்டுநருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈராண்டுகளுக்கு முன்னர் மெல்பர்னில் தாக்குதலை நடத்திய 29 வயது ஜேம்ஸ் கார்கசுலாஸ் (James Gargasoulas) எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 46 ஆண்டுகளுக்கு மறுக்கப்பட்டது. தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்தனர். அவர்களில் குழந்தை ஒன்றும் 10 வயதுச் சிறுமியும் அடங்குவர். அவுஸ்திரேலிய வரலாற்றில் ஒரேநேரத்தில் பலர் கொல்லப்பட்ட ஆக மோசமான சம்பவங்களில் ஒன்று இதுவென்று அவுஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

Read More »

மன்னிப்பதற்கான உரிமை!

1987ல் இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகிய கால கட்டத்தில் கொழும்பில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் ஜெயவர்த்தனாவும், ரஜீவ்காந்தியும் பங்குபற்றினார்கள். அதில் ஓர் ஊடகவியலாளர் இந்தியா பலவந்தமாக வானத்திலிருந்து உணவுப்பொதிகள் போட்டதைப்பற்றி ஜெயவர்த்தனாவிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ஜெயவர்த்தனா பின்வருமாறு பதிலளித்தார். ‘நான் அதை மன்னிப்பேன் ஆனால் அதை மறக்க மாட்டேன் என்று’ இது வழமைபோல ஜே.ஆரின் தந்திரமான ஒரு பதில். ஒன்றை மெய்யாக மன்னித்துவிட்டால் அதை மறந்துவிட வேண்டும். மன்னித்த பின்னும் மறக்கவில்லையென்றால் அங்கே பழிவாங்கும் உணர்ச்சி அல்லது ...

Read More »

‘தாமரை மொட்டு’ ராஜபக்சவின் குடும்ப கட்சி!

‘தாமரை மொட்டு’ பொதுமக்கள் கட்சி அன்றி அது ராஜபக்ச குடும்ப கட்சியாகும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்யிட வைப்பது ராஜபக்ச குடும்பத்தில் எந்த ராஜபக்சையை என்பதே பிரச்சினையாகும். என தொழில் மற்றும் தொழிற்துறைத் தொடர்புகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார். பல்லேகலையில் இடம் பெற்ற கரப்பந்தாட்ட மைதான திறப்பு விழாவிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது- இன்று ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்யிட வைப்பது ராஜபக்ச குடும்பத்தில் எந்த ராஜபக்சையை என்பதே பிரச்சினையாகும். கோத்தபாய ராஜபக்ச ...

Read More »

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை (25) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், இலங்கைக்கு இனிமேலும் கால அவகாசம் வழங்க வேண்டாமென தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ...

Read More »

வெனிசுலா அதிபர் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுகின்றன! -அமெரிக்கா

வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கிறது. வெனிசுலாவின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக்கொண்ட ஜூவான் குவைடோவுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால், அந்த நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகளை பெற அதிபர் நிகோலஸ் மதுரோ மறுக்கிறார். ஆனால் உதவி பொருட்களை கொண்டு வரும் முயற்சியில் ஜூவான் குவைடோ ஈடுபட்டுள்ளார். ஆனால் உணவுப்பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் வெனிசுலாவுக்குள் நுழையாத படி நாட்டின் ...

Read More »

ஒஸ்கர் 2019 – விருதுகள் முழு விவரம்!

அமெரிக்காவில் நடைபெற்ற ஒஸ்கர் விருது விழாவில் அகாடமி விருதை வென்ற திரைப்படங்கள், பிரபலங்கள் குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம். ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கும் 91-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. காலை சுமார் 7 ...

Read More »

ஐ.நா.விற்கு ஆதராவாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!

இலங்கைக்காக செயற்பட வேண்டிய மனித உரிமை ஆணைக்குழு இன்று  அரசியல்மயப்படுத்தப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும், மேற்குலக நாடுகளுக்கும் ஆதரவாக செயற்படுவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி, அரசியலமைப்பு பேரவையின் ஊடாக சுயாதீனமாக செயற்பட வேண்டிய ஆணைக்குழுக்கள் இன்று  அரசியல் கட்சிகளின் பிடிக்குள் அகப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கொக்கைன்  போதைப்பொருள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும்   விசாரணைகளின் உண்மைத் தன்மையானது கேள்விக்குறியாகவுள்ளதாகவும் அவர் இதன்போது ...

Read More »

யுத்தத்தில் குற்றங்கள் இடம்பெறவில்லையாம்!

முப்பது ஆண்டுகால யுத்தத்தை மூன்று ஆண்டுகளில் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற ஒரே நோக்கம் மட்டுமே எமக்கு இருந்தது. இந்த யுத்தத்தில் தவறுகள் இடம்பெறவில்லை. அவ்வாறு தவறுகள் இடம்பெற்றிருப்பின் யுத்தம் முடிவுபெற்றிருக்காது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டவர எமக்கு விமானங்கள் தேவைப்பட்ட காரணத்தினால் தான் “மிக்” உடன்படிக்கையை செய்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார். எலிய அமைப்பின் மாநாட்டில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார்.

Read More »

கண்ணே கலைமானே பார்த்து சாமியாட்டம் ஆடிய பெண்கள்!

உதயநிதியின் கண்ணே கலைமானே வெளியாகி இருக்கும் திரையரங்கில் சில பெண்கள் சாமியாட்டம் ஆடியிருக்கிறார்கள். சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்நிலையில் மதுரை, சோழவந்தான் என்ற ஊரில் உள்ள திரையரங்கில் கண்ணே கலைமானே திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது சில பெண்கள் திரையில் வரும் காட்சியை கண்டு சாமியாட்டம் ஆடியுள்ளனர். இந்த வீடியோவை ...

Read More »

இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தணிக்க உதவுங்கள்!

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க உதவுமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது. காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து இருப்பதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் இந்த பதிலடி எச்சரிக்கை பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. இந்தியாவின் பதிலடி எவ்வாறு இருக்குமோ? என்ற அச்சமும் ...

Read More »