‘தாமரை மொட்டு’ பொதுமக்கள் கட்சி அன்றி அது ராஜபக்ச குடும்ப கட்சியாகும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்யிட வைப்பது ராஜபக்ச குடும்பத்தில் எந்த ராஜபக்சையை என்பதே பிரச்சினையாகும். என தொழில் மற்றும் தொழிற்துறைத் தொடர்புகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார்.
பல்லேகலையில் இடம் பெற்ற கரப்பந்தாட்ட மைதான திறப்பு விழாவிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-
இன்று ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்யிட வைப்பது ராஜபக்ச குடும்பத்தில் எந்த ராஜபக்சையை என்பதே பிரச்சினையாகும். கோத்தபாய ராஜபக்ச சமல் ராஜபக்ச, சிரந்தி ராஜபக்ச போன்ற பல ராஜபக்சைகள் தயாராகி வருவதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி இரண்டு முறை பொது அபேட்சகரை நிறுததியது. ஆனால் இம்முறை ஐ.தே.க. வைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்படுவார். ஆவர் யார் என்பதை அச்சந்தர்ப்பத்தில் தெரிவிப்போம்.
புதிய தேர்தல் முறை பற்றிய பாராளுமன்ற பிரேரனையில் ஒரு பாதி மட்டுமே நிறைவேற்றப்பட்ட நிலையில் எல்லை நிர்ணய சட்டம் இன்னும் நிறைவேற வில்லை. இதனால் மாகாண சபைத் தேர்தலை எந்த சட்டத்தின் கீழ் நடத்துவது என்று தெரியாதுள்ளபடியால் அது தடைப்பட்டு வருகிறது. இதுவே தாமதத்திற்கான காணமாகும்.
ஆனால் புதிய முறையில் நடத்தப்பட வேண்டும் என்று 2/3 பெரும்பாக்மையுடன் தீர்மதனம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதை மாற்ற மேலும் 2/3 பெரும்பான்மை தேவையாகும்.
இதன் பிறகு வரும் தேர்தல்களில் பெரும்பாலும் தேசிய அரசு என்ற கோட்பாட்டை தழுவிய அரசுகளே அமைய முடியும். ஒரு தனிக்கட்சிக்கு போதிய அருதிப் பெரும்பான்மை பலம் கிடைப்பது நடைமுறை தேர்தல் முறையில் சிரமமாகவுள்ளது.
கோக்கேய்ன் போதைப் பொருள் பற்றி ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஒவ்வொரு இடங்களிலும் கருத்து வெளியிடுவதை நிறுத்தி உரிய இடத்தில் உரிய விதத்தில் அது தொடர்பாக முறைப்பாடுகளைச் செய்ய வேண்டும்.
அவர் இதுவரை அப்படியான விடயங்களைச் செய்ய வில்லை. இதனால் சகல பாராளுமன்ற அங்கத்தவர்களும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். சினிமாத்துறையில் அவர் அனுபவம் பெற்றாலும் அரசியலில் அவருக்கு போதிய அனபவம் இல்லை என்றுதான் கூற வேண்டும். சினிமா போல் அரசியலில் நடிக்க முட்பட்டதால் ஏற்பட்ட விளைவாகவும் இருக்கலாம் என்றார்.
Eelamurasu Australia Online News Portal