இலங்கைக்காக செயற்பட வேண்டிய மனித உரிமை ஆணைக்குழு இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும், மேற்குலக நாடுகளுக்கும் ஆதரவாக செயற்படுவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி, அரசியலமைப்பு பேரவையின் ஊடாக சுயாதீனமாக செயற்பட வேண்டிய ஆணைக்குழுக்கள் இன்று அரசியல் கட்சிகளின் பிடிக்குள் அகப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொக்கைன் போதைப்பொருள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணைகளின் உண்மைத் தன்மையானது கேள்விக்குறியாகவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.