உதயநிதியின் கண்ணே கலைமானே வெளியாகி இருக்கும் திரையரங்கில் சில பெண்கள் சாமியாட்டம் ஆடியிருக்கிறார்கள்.
சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
இந்நிலையில் மதுரை, சோழவந்தான் என்ற ஊரில் உள்ள திரையரங்கில் கண்ணே கலைமானே திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது சில பெண்கள் திரையில் வரும் காட்சியை கண்டு சாமியாட்டம் ஆடியுள்ளனர்.
இந்த வீடியோவை இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கண்ணே கலைமானே படத்தில் பெண்கள் சாமியாட்டம், பதிவு செய்து அனுப்பி மனோஜ்க்கு நன்றி என்று குறிப்பட்டுள்ளார்.
முன்பு அம்மன் போன்ற சாமி படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது பெண்கள் திரைக்கு முன்பு வந்து சாமியாடுவதை காண முடியும். தற்போது கண்ணே கலைமானே படத்திற்கு சாமியாட்டம் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal