கிளிநொச்சியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களுக்கு அருகில் குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி, உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்பு காணிகளிலேயே குறித்த செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2 மாதங்களாக குறித்த பகுதியில் இவ்வாறு குண்டுகள் செயலிழக்க பண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதனால் தாம் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் குடியிருப்புக்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் இவ்வாறான செயற்பாடுகள் ...
Read More »குமரன்
அமெரிக்காவுக்கு உதவத் தயார் : அவுஸ்ரேலியா
வடகொரியா அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு உதவ முன்வரப் போவதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்சுடன் பேசியபோது, அவுஸ்ரேலியப் பிரதமர் மெல்கோம் டர்ன்புல் (Malcolm Turnbull) அவ்வாறு கூறினார். பொருளியல் தடைகளை விதிப்பதே, வடகொரியாவைக் கையாள்வதற்கான மேலும் சிறப்பான வழி என்றார் டர்ன்புல். ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம் கடந்த சனிக்கிழமை, வடகொரியாவுக்கு எதிரான மேலும் சில கடுமையான தடைகளுக்கு ஒப்புதல் அளித்தது. அந்தத் தடைகளால், வடகொரியா ஆண்டுக்குச் சுமார் ஒரு பில்லியன் டாலர் இழப்பைச் சந்திக்க ...
Read More »நோக்கியா 6
சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் ரீ-என்ட்ரி ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா பீச்சர் போன் மற்றும் மூன்று ஸ்மார்ட்போன்களால் துவங்கியுள்ளது. சர்வதேச சந்தையை தொடர்ந்து நோக்கியா 3310 (2017), நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு நோக்கியா 6 தவிர மற்ற சாதனங்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகின்றன. நோக்கியா 6 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் 1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குவால்காம் ...
Read More »நடிகை ஓவியாவுக்கு குவியும் பட வாய்ப்புகள்!
காதல் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. விஜய் ஜோடியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா 2010-ம் ஆண்டு களவாணி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து இருந்தது. சீனி என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்து வந்தார். மலையாள ...
Read More »ரவி கருணாநாயக்க பதவி விலகினார்!
வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இன்று(10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று பனல் ஆற்றிய விஷேட உரையின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் தனது விஷேட உரையில் தொடர்ந்து கூறியதாவது, அன்று அமைச்சர்களுக்கு எதிரான குற்றக் கோப்புக்களை விசாரிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முடியாதிருந்தது. அந்தவகையில் தற்போது மிகவும் துரிதகதியில் நல்லாட்சியில் அமைச்சர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்காக நான் பெருமைப்படுகின்றேன். அதேபோன்று சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு நான் கூறுகின்றேன், கடந்த அரசாங்கம் தொடர்பாக ...
Read More »அவுஸ்ரேலியாவின் ‘தங்கப் பெண்’ காலமானார்!
அவுஸ்ரேலியாவின் ‘தங்கப் பெண்’ எனப் போற்றப்படும் தடகள வீராங்கனையும், நான்கு முறை ஒலிம்பிக் சம்பியன் பட்டம் வென்றவருமான பெட்டி குத்பேர்ட் (Betty Cuthbert) தனது 79வது வயதில் காலமானார். கடந்த ஐந்தாண்டு காலமாக தண்டுவட மரப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்ததாக அவுஸ்ரேலிய தடகள அமைப்பு அறிவித்துள்ளது. இவர் 1956 ஆம் ஆண்டு மெல்பேர்னில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் போட்டிகளில் இரு தங்கப் பதக்கங்களை வென்றார். தொடர்ந்து 8 வருட ஓய்வின் பின்னர் ...
Read More »வந்தாச்சு குட்டி ஸ்மார்ட்போன்
இன்றைய இளைஞர்களின் மோகம் பெரிய டிஸ்ப்ளே உள்ள ஸ்மார்ட்போனை நோக்கியே பயணிக்கிறது. ஆனால் அதற்கு மாற்றாக கோஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் மைக்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நானிட் மைக்ரோ என பெயரிடப்பட்டுள்ள இக் கைப்பேசி வெறும் 1.8 அங்குல அளவே உயரம் உடையது. ஸ்மார்ட்போன் கைக்கு அடக்கமாக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியினை ஏனைய Androidமற்றும் IOS சாதனங்களுடனும் இணைத்து பயன்படுத்த முடியும். இதில் மைக்ரோ சிம் மற்றும் மெமரி கார்டுகளை செலுத்தும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய ஸ்மார்ட்போனில் கால், மெசெஜ் மற்றும் ...
Read More »சமூக வலைதளங்களை ஆளும் விஜய்யின் “ஆளப்போறான் தமிழன்”
மெர்சல்’ படத்தில் இருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடலான “ஆளப்போறான் தமிழன்” சிங்கிள் டிராக் விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `மெர்சல்’. விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்குகிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வருகிற 20-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் மட்டும் இன்று மதியம் 3.30 மணியளவில் வெளியாகி ...
Read More »அவுஸ்ரேலிய அணியின் பீ்ல்டிங் பயிற்சியாளராக பிராட் ஹாடின் நியமனம்
அவுஸ்ரேலிய சீனியர் கிரிக்கெட் அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய சீனியர் கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளரான முன்னாள் பேட்ஸ்மேன்- மீடியம் பந்து வீச்சாளரான கிரேக் ப்ளிவெட் இருந்து வந்தார். இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த கிரிக்கெட் சங்கமான தெற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கத்தில் பணிபுரிவதற்காக தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இதனால் பிராட் ஹாடின் புதிய பீல்டிங் பயிற்சியாளரான நியமிக்கப்பட்டுள்ளார். ஹாடின் 2019-ம் ஆண்டு வரை இந்த பதவியை விகிப்பார். பிராட் ...
Read More »செல்ஃபி எடுக்க கற்றுக்கொடுக்கும் மொபைல் ஆப்!
செல்ஃபி எடுப்பதைக் கற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய செல்போன் செயலியை கனடாவைச் சேர்ந்த வாட்டர்லூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். செல்ஃபிக்களின் ஆதிக்கம் சமூகவலைதளங்களில் அதிகரித்து வரும்நிலையில், மக்களுக்கு சிறந்த செல்ஃபிக்களை எடுப்பதற்கு இந்த செயலி கற்றுக்கொடுக்கும் என்கிறார்கள். இதில் உள்ள அல்காரிதம், செல்ஃபி எடுக்கும் போது கேமிராவை எங்கு வைப்பது, எந்த திசையில் சரியான ஒளி கிடைக்கிறது, முகத்தின் அளவு ஆகியவற்றை கணக்கில் கொள்கிறது. அதன்மூலம் சிறந்த செல்ஃபிக்களை எடுக்க பயனாளர்களுக்கு உதவும் என்று கூறுகிறார்கள் வாட்டர்லூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள். ஆயிரக்கணக்கான சராசரி மனிதர்களின் முகங்கள் குறித்து 360 டிகிரி கோணத்தில் செய்யப்பட்ட ...
Read More »
Eelamurasu Australia Online News Portal