சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் ரீ-என்ட்ரி ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா பீச்சர் போன் மற்றும் மூன்று ஸ்மார்ட்போன்களால் துவங்கியுள்ளது. சர்வதேச சந்தையை தொடர்ந்து நோக்கியா 3310 (2017), நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு நோக்கியா 6 தவிர மற்ற சாதனங்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகின்றன.
நோக்கியா 6 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் 1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், மற்ற நிறங்கள் கொண்ட மாடல்களில் 3 ஜிபி ரேமும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், ஆர்ட் பிளாக் நிறம் கொண்ட மாடலில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் அனைத்து நிறம் கொண்ட மாடல்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.