குமரன்

அவுஸ்திரேலியாவில் அகதி ஒருவர் தற்கொலை!

மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள தடுப்பு முகாமில் தங்கியிருந்த அகதி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்த அகதியின் குடும்பத்தினர் அவுஸ்திரேலிய அரசுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 வயதான ஈராக் பின்னணி கொண்ட Saruuan Aljhelie, பெர்த்திற்கு கிழக்காக அமைந்திருக்கும் Yongah Hill குடிவரவு தடுப்பு முகாமில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டநிலையில், கடந்த 2ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களின் பின் உயிரிழந்தார். சிட்னி விலவூட் தடுப்பு முகாமிலிருந்து Yongah ...

Read More »

ஹபீஸ் சயீத்தின் இயக்கம் தனது பணிகளை மேற்கொள்ள அனுமதி!

ஹபீஸ் சயீத்தின் ஜேயூடி இயக்கம் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத், ஜே.யூ.டி என்ற அமைப்பையும் அந்த அமைப்பு மூலமாக தொண்டு நிறுவனம் என்ற பெயரில் பலாஹி இன்சனியாத் பவுண்டேஷன் (FIF) என்ற அமைப்பையும் நடத்தி வந்தார். ஐக்கிய நாடுகள் அவையின் தடைப்பட்டியலிலும் உள்ள ஹபீஸ் சயீத்தின் இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசு அண்மையில் தடை விதித்தது. ...

Read More »

புலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகம் திரும்பியவர் சிறிலங்கா காவல் துறையால் தாக்கப்பட்டார்!

சுவிஸ் நாட்டிலிருந்து நாடு திரும்பிய தமிழ் குடும்பத்தலைவர் ஒருவர், சுன்னாகம் காவல் துறை நிலையத்தில் தடுத்து வைத்துத்தாக்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தலைவரால் சுன்னாகம் காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. உடுவில் பகுதியைச் சேர்ந்தவரும் சுவிஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவருமான மொறிஸ் அருணாச்சலம் பிரகாஷ் (வயது -61) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். சிங்கள மற்றும் தமிழ் காவல் துறை உத்தியோகத்தர்கள் இருவரே தன்னைத் தாக்கியதாக குடும்பத் தலைவரால் சுன்னாகம் காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அவரால் குற்றஞ்சாட்டப்படும் ...

Read More »

இடையூறு விளைவித்த இரு இராணுவ வீரர்களை மடக்கி பிடித்த மக்கள்!

பூநகரி கரியாலை நாகபடுவன் கணேஸ் மக்கள்குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு செய்த இராணுத்தினரை மக்கள் மடக்கிப்பிடித்ததுள்ளனர்.இன்று அதிகாலை வீடு புகுந்த இராணுவத்தினரை கண்டு அச்சத்தில் சத்தமிட்ட வீட்டு உரிமையளரகளின் அலறல் சத்தத்தை கேட்ட அயல் வீட்டார்கள் குறித்த இரு இராணுவத்தினரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இராணுவத்தினர் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுவந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் போது, ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு கூறப்பட்ட நிலையில் இன்று பொதுமக்கள் ஆதாரத்துடன் இரு இராணுவ வீரர்களையும் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். மக்கள் குடியிருப்புக்குள் இரணுவமுகாம் இருப்பதால் ...

Read More »

“சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன்” !நடிகை ரேவதி

“5 வருடங்களுக்கு முன்பு சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன்”, என்று நடிகை ரேவதி கூறினார். பாரதிராஜா டைரக்டு செய்த ‘மண்வாசனை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், ரேவதி. ‘கன்னிராசி’, ‘ஆண்பாவம்’, ‘மவுனராகம்’, ‘அரங்கேற்ற வேளை’, ‘ஒரு கைதியின் டைரி’ உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவருக்கும் ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான சுரேஷ்மேனனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். சுரேஷ்மேனனும், ரேவதியும் சேர்ந்து ‘புதியமுகம்’ என்ற படத்தை சொந்தமாக தயாரித்தனர். அதில் சுரேஷ்மேனன் கதா நாயகனாக நடித்தார். ...

Read More »

சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பிரிவுக்குப் பின்னர், எவ்வாறான பாதையைத் தேர்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கூட்டமைப்பினரும் விக்னேஸ்வரனும் ஓரளவுக்குத் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக் கொள்வதற்கு முன்னரான, சம்பிரதாயபூர்வ சந்திப்புக்கான காத்திருப்பு மட்டுமே இப்போதுள்ளது. டெல்லிப் பயணத்தை முடித்துக்கொண்டு, இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும், ‘கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கூட்டமைப்பின் முதலமைச்சர் விக்னேஸ்வரன்’ என்கிற அடிப்படையிலான இறுதிச் சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது. தமிழரசுக் கட்சிக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள், ...

Read More »

படகில் அவுஸ்திரேலியா சென்ற 88 பேர் சர்வதேச கடலில் வைத்து கைது.!

படகில் அவுஸ்திரேலியா சென்ற 88 பேர் சர்வதேச கடலில் வைத்து செய்யப்பட்டுள்ளனர். மாலைதீவில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேர் சர்வதேச கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு ரங்கல கடற்படை முகாமிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை பகல் அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல் துறை  உயர் அதிகரி ஒருவர் தெரிவித்தார். இலங்கையில் இருந்து விமானமூலம் மாலைதீவிற்கு சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் கடலில் சென்ற இவர்களை  திங்கட்கிழமை அதிகாலை சர்வதேச கடற்பரப்பு பகுதியில் வைத்து ...

Read More »

விடாமல் தொடர்ந்து சண்டை போட்ட பாம்புகள் !

அவுஸ்திரேலியாவின் Coroy பகுதியில் இரண்டு பாம்புகள் விடாமல் தொடர்ந்து பத்து நிமிடங்கள் சண்டையிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு கட்டடத்தின் 3வது மாடியில் தொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு பாம்புகள் விடாமல் சண்டையிடுகின்றன. Gillian Bradley என்பவர் தன் வீட்டில் இருந்து இந்தக் காட்சியைப் படம் பிடித்துள்ளார்.

Read More »

103 வயதிலும் விவசாயம் செய்து வரும் மூதாட்டி!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள் என்கிற ரங்கம்மாள் (வயது 103). இவர் 1914-ம் ஆண்டு தேவனாபுரம் கிராமத்தில் பிறந்தார். தனது சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து விட்டார். இவருடைய பாட்டி இவரையும் இரு சகோதரிகளையும் தேக்கம்பட்டி அழைத்துவந்து அங்கு மளிகை கடை வைத்து தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியுள்ளார். பாட்டி இறந்த பிறகு மளிகை கடையை பாப்பம்மாள் எடுத்து நடத்த தொடங்கினார். இதே கிராமத்தில் ஓட்டலும் வைத்துள்ளார். சிறுக, சிறுக சேர்க்கப்பட்ட பணத்தில் தேக்கம்பட்டி கிராமத்தில் 10 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

அவுஸ்ரேலியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவில் பல்வேறு காலகட்டங்களில் புகலிடம் கோரிய, 9 இலங்கையர்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில் பேர்த் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டனர். நேற்று இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததை அடுத்து, அவுஸ்ரேலிய அதிகாரிகளால் இந்த 9 பேரும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து இந்த 9 பேரையும் கைது செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ...

Read More »