அவுஸ்ரேலியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் பல்வேறு காலகட்டங்களில் புகலிடம் கோரிய, 9 இலங்கையர்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில் பேர்த் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டனர்.
நேற்று இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததை அடுத்து, அவுஸ்ரேலிய அதிகாரிகளால் இந்த 9 பேரும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையடுத்து இந்த 9 பேரையும் கைது செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 27, 29, 36, 48 வயதுகளை உடையவர்கள் என்றும், முந்தல், கொச்சிக்கடை, உடப்பு, சிலாபம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal