குமரன்

48 மணிநேரத்துக்குள் முக்கிய சதித்திட்டம் !

முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதானி ஒருவரால் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கொலை முயற்சி ஒன்று குறித்து எதிர்வரும் 48 மணி நேரத்துக்குள் தெரிவிப்பதாக ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார். குறித்த கொலை சதித்திட்டம் தொடர்பான குரல் பதிவை 12ஆம் திகதி காவல் துறையிடம்  ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதி காவல் துறை மா அதிபராக நாலக சில்வா பதவி வகித்த போது இந்த விடயம் தொடர்பான குரல் பதிவை அவரிடம் தான் வழங்கிய போதும் , அவர் ...

Read More »

7 மில்லியன் ரூபாயுடன் தலைமறைவு!

களுத்துறை- தொடங்கொட பிரதேசத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் வைப்பிலிடப்பட்டிருந்த 700 கோடி ரூபாயுடன் குறித்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளாரென களுத்துறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில், நேற்றைய தினம் தொடங்கொட காவல் துறை நிலையத்துக்கு 40 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றதாக களுத்துறை பிரதேசத்துக்கு பொறுப்பான காவல் துறை அத்தியட்சகர் உபுல் நில்மினி தெரிவித்துள்ளார். அத்துடன் மத்துகம பிரதேச காவல் துறை விசேட மோசடி விசாரணைப் பிரிவுக்கு பல முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய, ...

Read More »

தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்!

அலெய்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான இன்று 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தன. 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 323 ரன்கள் அடித்தால் வெற்றி ...

Read More »

சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்?

வவுனியாவில் இடம்பெற்ற எழுநீ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்கினேஸ்வரன் சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ரணில்-மைத்திரி அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின் நிகழ்ந்த பேரங்களில் சிவசக்தி ஆனந்தனோடு நிகழ்ந்த உரையாடல் என்று சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்று வெளிவந்தது. இவ்வொலிப்பதிவை முன்வைத்து கஜன் அணி ஆனந்தன் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது. ஆனால் அது பகிடியாகக் கதைக்கப்பட்ட ஓர் உரையாடலின் பதிவென்று ஆனந்தன் பின்னர் தெரிவித்திருந்தார். எழுநீ உரையில் விக்கினேஸ்வரனும் அதை ஒரு பகிடியாக ஏற்றுக் கொண்டு பேசியிருக்கிறார். இதுவிடயத்தில் விக்கினேஸ்வரன் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை கஜேந்திரக்குமாரின் நோக்குநிலையிலிருந்து ...

Read More »

வசந்தம் வீசுகிறது.. வாழ்க்கை இனிக்கிறது..!

பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலெட்சுமி மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கிறார். கணவர் அனுப், அவரை கைக்குள் தாங்குகிறார். மனைவிக்கு கண்தெரியாது என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி அவரை பாதுகாக்கிறார். கேரளாவில் வைக்கத்தில் உள்ள கோவிலில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட அவர் கணவரிடம் முதன் முதலில் சொன்னது என்ன தெரியுமா? எந்த புதுப்பெண்ணும் தனது கணவரிடம் சொல்லாத விஷயம் அது! முகூர்த்தம் முடிந்து, எல்லோரும் வாழ்த்திவிட்டு கலைந்து கொண்டிருந்த நேரத்தில் கணவரிடம் மெல்லிய குரலில் ‘என் கையில் கொஞ்சம் கிள்ளுகிறீர்களா?’ என்றார். காரணம் ...

Read More »

உலகில் முதல் முறையாக அவுஸ்திரேலியாவில் அறிமுகமாகும் சட்டம்!

கணினி தொழில்நுட்ப முறையில் பாதுகாக்கப்பட்ட தகவல்களை உடைப்பதற்கு தேவையான அதிகாரத்தை  காவல் துறை  பாதுகாப்பு முகவர் நிலையங்களுக்கும் வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவிடயம் தொடர்பான சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்றை அவுஸ்திரேலியா நேற்று நிறைவேற்றியுள்ளது. இவ்வாறான ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவது உலக நாடுகள் மத்தியில் முதற்தடவையான சந்தர்ப்பம் என்று குறிப்பிடப்படுகிறது. பயங்கரவாதம் மற்றும் பாரிய குற்றச்செயல்களை தடுப்பதற்கு பாதுகாப்பான தகவல்களை உடைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

Read More »

கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை!

ஹூவாய் நிறுவன அதிகாரியை உடனே விடுதலை செய்யாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள் மெங்வான்ஜவ். இவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. கடந்த 1-ந் திகதி கனடாவில் வான்கூவர் நகரில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் வேண்டுகோளின்பேரில் இந்த நடவடிக்கையை கனடா மேற்கொண்டது. வடகொரியா, ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை, ஹூவாய் நிறுவனம் மீறியதாக ...

Read More »

நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்!

நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே ஜனவரி மாதத்தில் எந்த தேர்தல் இடம்பெரும் என்பதை தீர்மானிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.   அத்துடன் நாடாளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை நடத்தவதற்காக சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்துள்ள நிலையில் தற்போது தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனவரி மாத்தில் ஜனாதிபதி மற்றும் பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகள் பல்வேறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் இது ...

Read More »

ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்த அஸ்வின், ஷமி!

அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 250 ரன்னில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா  98.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. பின்னர் இந்திய அணி 15 ரன் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை விளையாடியது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ...

Read More »

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக ஜயசுந்தர நியமனம்!

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக யாழ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட காவல் துறை  அத்தியட்சகர் எஸ்.ஈ.ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஜயசுந்தர அமைச்சுகளின் இ​ணைப்பு பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது வெற்றிடத்துக்கு பொலிஸ் உடற்பயிற்சி நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியாக கடமையாற்றி வந்த யூ.பீ.ஏ.டீ.கே.பீ. கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Read More »