நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்!

நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே ஜனவரி மாதத்தில் எந்த தேர்தல் இடம்பெரும் என்பதை தீர்மானிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

 

அத்துடன் நாடாளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை நடத்தவதற்காக சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்துள்ள நிலையில் தற்போது தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனவரி மாத்தில் ஜனாதிபதி மற்றும் பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகள் பல்வேறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.