குமரன்

48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்!

அயோக்யா படப்பிடிப்பில் முக்கியமான காட்சிக்காக நடிகர் விஷால் தொடர்ந்து 48 மணி நேரம் இடைவிடாமல் நடித்துள்ளார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட் ஒன்று போடப்பட்டுள்ளது.  படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று ...

Read More »

அவுஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்குதல்!

அவுஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கியதில் 41 வயதான நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. Belongil கடற்கரையில் அலையாடலில் ஈடுபட்டிருந்த போது அவருடைய பலகையைச் சுறா தாக்கியது. உடனிருந்த மற்றொரு நண்பரின் உதவியோடு அவர் சுறாவிடமிருந்து தப்பித்தார். எந்த மாதிரியான சுறா தாக்கியது என்பதை பொலிஸார் ஆராய்ந்து வருகிறது. அந்த சம்பவத்திற்கு பிறகு, இரண்டு கடற்கரைகளும் 24 மணி நேரத்திற்கு மூடப்பட்டன.

Read More »

சூகியின் ஆலோசகர் கொலையில் இருவருக்கு மரண தண்டனை!

மியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கோ னி கொலை வழக்கில் கி லின் மற்றும் ஆங் வின் சா ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மியான்மர் அரசின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவரது ஆலோசகராகவும், பிரபல வக்கீலாகவும் இருந்த கோ னி (வயது 63), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யாங்கோன் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கி லின் என்பவரை உடனடியாக கார் டிரைவர்கள் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனர். ...

Read More »

இராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது!

சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. போரில் இராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையை நாட்டின் பிரதமர் முதன்முறையாக பகிரங்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ள 10 ஆண்டுகள் எடுத்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர்,  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா  தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். “ராணுவ வீரர்கள் எந்தக் ...

Read More »

வட மாகா­ணத்­தில் 275 பாட­சா­லை­கள் மூடப்­பட வேண்­டிய நிலை­யில்!

50 க்கும் குறைவான மாணவர்கள் கற்கும் ஆயிரத்து 486 அரச பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர் நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்­டில் 10 ஆயி­ரத்து 194 அரச பாட­சா­லை­கள் உள்­ளன. இவற்­றுள் 9 ஆயி­ரத்து 841 பாட­சா­லை­கள் மாகா­ண­ச­பை­க­ளால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றன. 353 பாட­சா­லை­கள், தேசிய பாட­சா­லை­கள் என்ற அடிப்­ப­டை­யில் கொழும்பு அர­சால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றன. மாகாண சபை­க­ளின் கீழ் 4 ஆயி­ரத்து 59 மூன்­றாந்­தர வகைப் பாட­சா­லை­கள் இயங்­கு­கின்­றன. இவ்­வ­கை­யான பாட­சா­லை­க­ளில் ஆயி­ரத்து 486 பாட­சா­லை­கள் ...

Read More »

நாம் புலிகளாக இருந்தோம்! – இயக்குநர் செழியன்

இது உலக சினிமாக்களை வியந்து கொண்டாடும் தலைமுறை யின் காலம். இப்போது தமிழ் சினிமா ஒன்றை உலகமே உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படம் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குநர் செழியனின் படைப்பாக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டுலெட்’. உலக அளவில் 100 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, 84-ல் அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்ட படம். சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது உட்பட, மொத்தம் 32 சர்வதேச விருதுகளை அள்ளிக் குவித்திருக்கும் முதல் தமிழ் சினிமா. உலகம் சுற்றித் திரும்பியிருக்கும் ‘டுலெட்’ பிப்ரவரி 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ...

Read More »

நிதி அல்ல நீதியே வேண்டும்!

ஜெனீவா மனித உரிமைச் சபை எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள நிலையில், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் கொல்லப்பட்ட, கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க இலங்கை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்துள்ளது. ஆனால் நஷ்டஈட்டை விட நீதி கிடைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு என தமிழ் ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர். அத்துடன் இந்த நஷ்டஈடும் உரிய முறையில் வழங்கப்படுமா என்பது குறித்தும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களும் சந்தேகம் ...

Read More »

அவுஸ்திரேலிய குடியுரிமை பரீட்சையில் 4807 பேர் தோல்வி!

அவுஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்கான பரீட்சையில் கடந்த வருடம் நான்காயிரத்து 807 பேர் அனைத்து வினாக்களுக்கும் தவறாக பதிலளித்து தோல்வியடைந்துள்ளனர். உள்துறை அமைச்சினால் இந்த பரீட்சை நடத்தப்பட்டுவருகின்றது. குடியுரிமை பெற்றுக்கொண்டவர்களில் ஆயிரத்து 200 பேர் மூன்று தடவைகளுக்கு மேல் இந்த பரீட்சையில் தோல்வியடைந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுத்திணைக்களம் மற்றும் உள்துறை அமைச்சின் செயற்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்டுவரும் பரீட்சை எவ்வளவு சிக்கலானது என்பது இந்த முடிவுகளின் மூலம் தெளிவாகிறது. மேற்படி தரவுகளை மேற்கோள்காண்பித்து ஊடகங்கள் ...

Read More »

ஆப்கானிடம் படித்த பாடங்கள்!

ஒரு இராணுவத்தின் எச்சமிச்சம் ;  வரலாற்றில் இடம்பெற்ற இராணுவ மோதல்களின் காட்சிகளை தத்ரூபமாக வரைவதில் புகழ்பெற்ற 19 ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் பெண் ஓவியர்  எலிசபெத் பட்லர் வரைந்த மெழுகுச்சேலை ஓவியம் முதலாவது இங்கிலாந்து – ஆப்கான் போரின் (1839 — 1842 ) நீடித்து நிலைக்கும்  காட்சித்தோற்றமாக விளங்குகிறது. அது பிரிட்டிஷ் இராணுவத்தின் ஒரு மருத்துவ அதிகாரியான வில்லியம் பிரைடன் 1842 ஆம் ஆண்டில் காபூலில் இருந்து ஜலலாபாத் வந்துசேருவதைச் சித்திரிக்கிறது. காயமடைந்த பிரைடனுடன் அவரது குதிரையும் களைத்துச் சோர்ந்துபோய்விட்டது. பிரிட்டனின் ஆப்கான் ...

Read More »

அவுஸ்திரேலிய குடியுரிமையுடைய மாப்பிள்ளைகள் வாங்கிய சீதனம்!

குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாக சட்டத்தில் சீதனம் வாங்கும் முறையினை உள்ளடக்கவேண்டும் என செனட் குழு அவுஸ்திரேலிய அரசிடம் பரிந்துரைத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் சீதனம் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் மக்களிடம் முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் செனட் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அவுஸ்திரேலியாவில் தற்போது நடைமுறையிலுள்ள குடிவரவாளர்களுக்கான திட்டங்களின் கீழ் தற்காலிக விசாவிலுள்ள பெண்களுக்கான பாதுகாப்பு மிகக்குறைவாக உள்ளது. ஆகவே பெண்களுக்கு எதிரான வரதட்சனைக் கொடுமை பெரும் எண்ணிக்கையில் நடைபெறுகிறது என்று குறித்த அமைப்பு சுட்டியுள்ளது. தற்கொலைகள் மற்றும் கொலைகளுக்கு சீதனக்கொடுமை பிரதான காரணமாக ...

Read More »