குமரன்

சார்லி சாப்ளின் – 2

பிரபுதேவாவின் வாழ்வில் சாரா என்ற பெயரில் இருவர் குறுக்கிடுகிறார்கள். சந்தர்ப்ப சூழலால் இருவரையும் காதலிப்பதாகவே பிரபுதேவா கூறுகிறார். இறுதியில் யாரைக் கரம் பிடிக்கிறார் என்பதே ‘சார்லி சாப்ளின் – 2’. மேட்ரிமோனியல் இணையதளம் நடத்துகிறார் பிரபுதேவா. 99 திருமணங்களை நடத்திய தன் மகன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற ஏக்கமும் கவலையும் பிரபுதேவாவின் பெற்றோருக்கு ஏற்படுகிறது. இந்த சூழலில் சாராவை (நிக்கி கல்ராணி) பார்க்கிறார். அவரது உதவும் உள்ளத்தால் காதலில் விழுகிறார். ஒரு கட்டத்தில் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதிக்கின்றனர். ஆனால். நண்பன் ஒருவனால் ...

Read More »

தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா? அல்லது ஒட்ட வைக்குமா?

விக்னேஸ்வரன் கடந்த ஒக்ரோபர் மாதம் ஒரு புதிய கட்சியை அறிவித்த பின் ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னிடம் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். ‘அவர் சம்பந்தரால் பரசூட் மூலம் அரசியலுக்குள் இறக்கப்பட்டவர். ஆனால் ஒரு கட்சியை பரசூட் மூலம் இறக்க முடியாது.’ என்று. இதே தொனிப்பட பல மாதங்களுக்கு முன்பு டாண் ரி.வியின் பணிப்பாளரும் என்னிடம் சொன்னார். ‘கொழும்பு மைய விக்னேஸ்வரனால் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தன்னோடு நிற்பவர்களுக்கு சம்பளத்தையும் கொடுத்து முழு நேரமாக ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப முடியுமா?’ என்று. விக்னேஸ்வரனின் ...

Read More »

பிலிப்பைன்சில் தேவாலயம் உள்பட இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு!

தெற்கு பிலிப்பைன்ஸ் ஜோலோ தீவில் கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து தாக்கப்பட்ட குண்டு வெடிப்பில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிலிப்பைன்சில் உள்ள ஒரு தேவாலயத்தில் அடுத்தடுத்து நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் சிக்கி 27 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சூலு மாகாணத்தில் அபு சாயப் என்கிற பயங்கரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்சால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள், ஆட்களை கடத்தி படுகொலை செய்வது மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவது போன்ற ...

Read More »

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் படமாகிறது!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், அந்த சம்பவத்தை, படமாக இயக்குவதாக இயக்குநர் சந்தோஷ் கோபால் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே 22-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். இதில் ஏற்பட்ட கலவரத்தால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ...

Read More »

மொட்டுக்குள் பிளவு!

தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதென, தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பெரமுனவால் எடுக்கப்படும் தீர்மானங்களில் கடும் அதிருப்தி கொண்டுள்ளவர்கள், அதிலிருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்துள்ளனரென அறியமுடிகின்றது. அதிருப்தியாளர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனரென அறியமுடிகின்றது. அதிருப்தியாளர்கள், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனரென, அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

Read More »

சம்பள விவகாரம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம்! கைச்சாத்திடவேண்டாமென எதிர்ப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம், இன்று (28) கைச்சாத்திடப்படவுள்ளது. இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளமான 700 ரூபாய்க்கு, கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடவேண்டாமென வலியுறுத்தி, பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் மற்றுமொரு கட்டமாக, முதலாளிமார் சம்மேளனத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை, இன்று (28) நடத்துவதற்கு, பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன. கடந்த நான்கு மாதங்களாக இழுபறியிலிருந்த கூட்டு ஒப்பந்த விவகாரம், கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் ​போது, இருதரப்பு இணக்கத்துடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, அடிப்படைச் சம்பளமாக ...

Read More »

அரசியல் தீர்வு முயற்சி ஏன் இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது?

புதிய அரசியல் யாப்பு ஒன்று வரவுள்ளது என்னும் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றன. ஆனால் இன்றைய தென்னிலங்கை அரசியல் நிலைமைகள் ஒரு விடயத்தை தெளிவாக நிரூபித்துவிட்டது. அதாவது, அவ்வாறானதொரு அரசியல் யாப்பு ஒன்று வரப்போவதில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான நிபுனர் குழு அறிக்கையொன்று வெளியாகியிருக்கிறது. இதனை தாம் நிராகரிப்பதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியியான புளொட்டின் தலைவர் சித்தார்த்தனோ, பல்வேறு சந்தர்ப்பங்களில், புதிய அரசியல் யாப்பு ஒன்று வரப்போவதில்லை என்று ...

Read More »

அவுஸ்திரேலியாவினால் சிறிலங்கா கடலோர பாதுகாப்பு படைக்கு மூன்று துறைமுக படகுகள்

அவுஸ்த்ரேலியாவினால் சிறிலங்கா கடலோர பாதுகாப்பு படைக்கு மூன்று மூன்று துறைமுகு படகுகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வு கொழுப்பு துறைமுகத்தில் உள்ள சிறிலங்கா  கடற்படை தளத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  ருவான் விஜேவர்தன தலைமையில் இடம்பெற்றது. இத் துறைமுக படகுகள் 2017 ஆம் ஆண்டு சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் ட்ருன்பலினால் சிறிலங்கா கடலோர பாதுகாப்பு படைக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக, குறித்த படகுகளை சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரையஸ் ஹட்ஷ்சன் பாதுகாப்பு ...

Read More »

மயங்கி விழுந்த கற்பிணிப் பெண் உயிரிழந்த சோகம்!

மயங்கி விழுந்த கற்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த  சம்பவம் கரணவாய் தெற்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது.   பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும் குலதீபன் பிரிந்தா (வயது-32) என்ற கற்பிணிப் பெண் வைத்தியசாலையில் வேலை முடித்துவிட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் வீடு திரும்பிய அவர் சற்று நேரத்தில் மயக்கமுற்று விழுந்துள்ளார். அவரை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில்  பருத்தித்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

சுயாதீனமான விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயார்!

போக்குவரத்து அமைச்சராக தான் பொறுப்பிலிருந்த காலக்கட்டத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை பெற்றுக் கொண்ட முறைமையில் முறைக்கேடுகள் இடம் பெற்றிருந்தால் கோப் குழுவினர் ஆதரத்துடன் முன்னிலைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, சுயாதீனமான விசாரணைகள் இடம்பெறுமாயின் முழுமையான ஒத்துழைப்புக்கள் வழங்கத் தயார் எனவும் குறிப்பிட்டார். 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கை போக்குவரத்து சபையில் பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் கோப் குழுவினர் குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் வினவிய பொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சர் பொறுப்பில் ...

Read More »