குமரன்

விஜய்க்கு மறு மணம்!

அஜித்குமாரின் ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குநர்  அறிமுகமானவர், விஜய். இவர், பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன். நடிகர் உதயாவின் தம்பி. ‘பொய் சொல்லப்போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’ உள்பட பல படங்களை இயக்கி உள்ளார். ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு விஜய் தொடர்ந்து படங்கள் இயக்கி வந்தார். அவருக்கு 2-வது திருமணம் ...

Read More »

பெண் பத்திரிகையாளரே இலங்கையிலிருந்து வெளியேறுக!

டுவிட்டரில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்காக அவரை இலங்கையை விட்டு வெளியேறுமாறு சிறிலங்கா  கடற்படையின் முன்னாள் பிரதானியும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளருமான மொகான் விஜயவிக்கிரம வேண்டுகோள் விடுத்துள்ளமைக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கையில் பேருந்து புகையிரத பிரயாணங்களின் போது பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களிற்கு  உள்ளாவதை சுட்டிக்காட்டி பெண் பத்திரிகையாளர்  பதிவு செய்த கருத்திற்காக முன்னாள் கடற்படை அதிகாரி அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பதிவிட்டுள்ளார் வக்கிர மனோபாவம் கொண்ட நபர் ...

Read More »

வத்தளையில் தமிழ் பாடசாலை! – இன்று அடிக்கல் நாட்டு விழா!

வத்தளையில் தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறுகின்றது. இது தொடர்பான நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும். முதலாம் தரத்தில் இருந்து வத்தளையில் செயற்படும் தமிழ் மொழிமூல ஒரு தேசிய பாடசாலையாக இப்பாடசாலை அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாடசாலைக்காக 4 மாடி கட்டட தொகுதி அமைக்கப்படவுள்ளது. இதற்கான மொத்த மதிப்பீட்டு தொகையாக சுமார் 8 கோடி ரூபாவாக மதிப்பிடிப்பட்டுள்ளதுடன் முதற்கட்ட ஒதுக்கீடாக 3 ...

Read More »

மதமாற்றத்துக்கு என்ன தண்டனை கூறப்பட்டுள்ளது?

1981 இல் அச்சிடப்பட்ட புத்தகத்தில் இஸ்லாமிய மதத்தை விட்டு செல்பவர்களுக்கு மரணமே தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் சமூக வாழ்வியல் கட்டமைப்பை சிதைப்பவர்களுக்கு  வழங்கப்படும் தண்டனை பற்றி கூறப்பட்டுள்ளன இந்த தண்டனைகளால் தவறுகளை செய்யாத சமூக கட்டமைப்பை ஒன்றை உருவாக்குவதே இஸ்லாம் மதத்தின் நோக்கமாக உள்ளதெனவும்  கூறப்பட்டுள்ளது என  பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட கல்வி அமைச்சின் செயலாளர் – இ.எம்.எம். ரணசிங்கவிடம் தெரிவுக்குழு நடத்திய விசாரணைகளின் போதே அவர் இதனை தெரிவித்தார். கேள்வி – கல்வி அமைச்சின் செயலாளர் என்ற வகையில் இஸ்லாமிய ...

Read More »

அஜித் படத்தில் ஆங்கில பாடல்!

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் பாடலில் ராப் இசைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் வரிகள் இடம்பெற்றுள்ளன. அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானின் இருள்’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து தற்போது ‘காலம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் இசையில் இந்தப் பாடலை நாகார்ஜுன், யோன்ஹோ ஆகியோர் இணைந்து எழுத அலிஷா தாமஸ், யோன்ஹோ பாடியுள்ளனர். ’கவலை வேண்டாமே என் ...

Read More »

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் ஜேசன் ராய் அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் டக் அவுட்டனார். டேவிட் வார்னர் 9 ரன்னிலும், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ...

Read More »

அவுஸ்ரேலிய படகு விபத்தில் மூவர் உயிரிழப்பு!

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். சிட்னிக்கு வடக்கே 160 கி.மீ (100 மைல்) தொலைவிலுள்ள நியூகேஸில் இன்று(வியாழக்கிழமை) இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த அவசர மீட்பு படையினர் இருவரை காப்பாற்றியுள்ளனர். 40 வயதான ஆண்ணொருவரும், 16 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், குறித்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த படகு ...

Read More »

பப்புவா நியூகினியா நாட்டில் பழங்குடியினர் மோதல் – 24 பேர் உயிரிழப்பு!

பப்புவா நியூகினியா நாட்டில் மலைவாழ் பழங்குடி இன மக்களிடையே நிகழ்ந்த மோதலில் 24 பேர் உயிரிழந்தனர். பசிபிக் பெருங்கடல் தீவு நாடு, பப்புவா நியூகினியா. அங்கு மலைவாழ் பழங்குடி இன மக்களிடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. சட்டத்தின் ஆட்சியை அங்கு நிலை நிறுத்த முடியாமல் அரசாங்கம் திணறுகிறது. இந்த நிலையில், அங்கு இரு பழங்குடி இன மக்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக்கொண்டனர். 3 நாட்களாக நடந்து வந்த இந்த மோதலில் 24 பேர் உயிரிழந்தனர். ...

Read More »

நீண்ட நாள் போராட்டத்தின் பின் மீன் பிடிக்க இரு தமிழ் மீனவர்களுக்கு அனுமதி!

நீரியல் வள திணைக்களத்தின் ஊடக அனுமதி வழங்கப்பட்டபோதும் மீண்டும் குறித்த தமிழ் மீனவர்கள் பெரிய மடு குளத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதி சகோதர இன மீனவர்களால் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடும் போரட்டத்தின் மத்தியில் ஆறு மாதங்களின் பின்னர் இரண்டு மீனவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு குறித்த மீனவர்கள் நேற்று புதன் கிழமையிலிருந்து மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஈச்சளவாக்கை  மற்றும் சன்னார் பகுதிகளில் நன்னீர் மீன் பிடியில் பல வருடங்களாக ஈடுபட்ட தமிழ் மீனவர்கள் ...

Read More »

தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் தேடுதல்!

தமிழீழ விடுதலை புலிகளால் இறுதி போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 27 ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடி 15 பேர் அடங்கிய குழு ஒன்றால் விசேட ஸ்கேனர்கள் மூலம் தேடுதல் நடத்தப்பட்டு அகழ்வு நடவடிக்கை ஆரம்பமாகவிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக அனைவரும் கைது செய்யபட்டிருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குழுவினரின் தகவலுக்கு அமைவாக ...

Read More »