அஜித்குமாரின் ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குநர் அறிமுகமானவர், விஜய். இவர், பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன்.
நடிகர் உதயாவின் தம்பி. ‘பொய் சொல்லப்போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’ உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.
‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு விஜய் தொடர்ந்து படங்கள் இயக்கி வந்தார். அவருக்கு 2-வது திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு-அனிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யாவை சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று காலை திருமணம் நடைபெற்றது!