குமரன்

சோதனை செய்வதையும் தடுப்பூசி போடுவதையும் அதிகரிக்க அழைப்பு

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 452 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுள்ளவர்களில் 50 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.  தொற்றுக்குள்ளாகுபவர்களில் 70 சதவீதத்தினர் 40 வயதிற்குட்பட்டவர்கள்.  வயது எழுபதுகளிலுள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பெண் ஒருவர் இறந்துள்ளார். Lennox Head பகுதி கழிவு நீர் சோதனையில் Covid-19 கூறுகள் கண்டறியப்பட்டதால், அந்தப் பகுதியில் குடியிருப்பவர்கள் Covid சோதனை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Premier Gladys Berejiklian அழைப்பு விடுத்துள்ளார்.

Read More »

தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகள் முடக்கம்

ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியிலும் ஒரு வித அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ‘ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் அங்கு இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. அதேபோல், ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியிலும் ஒரு வித அசாதாரண சூழல் நிலவி வருகிறது. தாங்கள் அச்சத்துடனே இருப்பதாக ஆப்கானிஸ்தானியர்கள் பேட்டி அளிக்கும் ...

Read More »

சசிகுமாருக்கு ஜோடியாகும் கன்னட நடிகை

கழுகு பட இயக்குனர் சத்யசிவா அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க கன்னட நடிகை ஒப்பந்தமாகி உள்ளார். சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய சசிகுமார் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, கிடாரி, நாடோடிகள் 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு 2, நாநா, உடன்பிறப்பு என ...

Read More »

மரணங்கள் மலியும் பூமி

நாட்டின் எல்லாப் பாகங்களிலும், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளதால், நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போவதற்கிடையில், சில வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு, சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை விடுத்துவந்தனர். ஆனால், அந்தத் தீர்க்கமான தீர்மானத்தை எடுப்பதில், மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வந்த அரசாங்கம், இப்போது இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் திரிபுகளின் அதிகரித்த தொற்றுக் காரணமாக சுகாதார, பொருளாதார, சமூக அடிப்படைகளில் பெரும் பின்னடைவையும் அவல நிலையையும் இலங்கை சந்தித்திருக்கின்ற இக்கால கட்டத்தில்,  அரசாங்கத்தால் எடுக்கப்படுகின்ற இவ்வாறான காலம் பிந்திய, மட்டுப்படுத்தப்பட்ட ...

Read More »

கிளிநொச்சியில் தீவிரமடைந்த கொரோனா பரவல்

அபாயம் மிக்க மாவட்டமாக கிளிநொச்சி அடையாளம் காணப்பட்டுள்ளதாக. பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில், முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நாள் தொடக்கம் கடந்த மாதம் 31ஆம் திகதி வரை 1,400 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், ஆனால் இந்த மாதம் முதல் 16 நள்;களில் மாத்திரம் 1246 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார். நாட்டில் தீவிரமாகப் பரவிவரும் கொரனா, தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் அதிதீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது என்பதனையே ...

Read More »

சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருந்த காணிகள் விடுவிக்கப்படுமா?

சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருந்த அரச மற்றும் பொதுமக்களது காணிகள் விடுவிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் பின்தங்கிய கிராமிய பெருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு மாவட்டத்திலும் படையினர் வசமிருந்து வருகின்ற பல காணிகளை விடுவிக்கும் வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக அண்மையில் கும்புறுமுலையில் மூன்று தசாப்த காலமாகப் இராணுவம் ஆக்கிரமித்திருந்த 30 ஏக்கரிற்கு மேற்பட்ட தனியார் காணியொன்று விடுவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று முறக்கொட்டாஞ்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் இராணுவ முகாம் அமைந்திருக்கும் காணிகளையும் விடுவிப்பதற்காக படைத்தரப்பினருடன் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தப்பட்டு வருகின்றன. ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட புதைபடிமம் – மிகப்பெரிய பறக்கும் வகை பல்லியினம்

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறக்கும் வகையைச் சேர்ந்த மிகப்பெரும் பல்லியினம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த   பறக்கும் வகையைச் சேர்ந்த மிகப்பெரும் பல்லியினம்  என்று கண்டறியப்பட்டுள்ளது. குயின்ஸ்லேண்டில் கடந்த 2011ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இதன் புதைபடிமத்தை ஆய்வு செய்த அறிஞர்கள், இதற்கு “தபுங்கக்கா ஷவி” என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இவை சுமார் 7 மீட்டர் நீளமுள்ள இறக்கைகளுடனும், 1 மீட்டருக்கு கூடுதலான நீளமுடைய கூர்மையான 40 பற்களுடன் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ...

Read More »

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 478 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அதில் ஐந்து பேர் தடுப்பூசி போடவில்லை.  தொற்றினால் ஏழு பேர் இறந்துள்ளார்கள். COVID-19 தொற்றின் அறிகுறிகளைக் கொண்டுள்ளவர்கள், தொற்று அதிகமாகப் பரவியிருக்கும் பகுதிகளில் வசிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு சோதனை செய்வதற்கு 320 டொலர் மானியம் கிடைக்கலாம்.  மானியம் பெறுவதற்கு, அவர் தொழில் புரிபவராகவும் 17 வயதிற்கும் மேற்பட்டவராக இருக்க வேண்டும். தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் மற்றும் பிற வருமான ஆதரவுக்குத் தகுதியற்றவர்கள், இப்போது செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ...

Read More »

ரிஷாட்டின் மைத்துனருக்கு பிணை

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர், பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். ரிஷாட்டின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய யுவதியை 2016ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் ​பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அந்த வீட்டில் பணியாற்றிய டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே, அவ்வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு யுவதியும் பாலியல் துஷ்பிர​யோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்தது. அதனையடுத்தே ரிஷாட்டின் மைத்துனர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

Read More »

அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரிக்கை

பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகளை உள்வாங்குமாறு அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எழுத்துப்பூர்வமாக இக்கோரிக்கையானது முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 60,000 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன, எனவே வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகளுடன் ஆட்சேர்ப்பு செயல்முறையை முடிக்குமாறு இது தொடர்பான அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

Read More »