நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 478 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அதில் ஐந்து பேர் தடுப்பூசி போடவில்லை.  தொற்றினால் ஏழு பேர் இறந்துள்ளார்கள்.

COVID-19 தொற்றின் அறிகுறிகளைக் கொண்டுள்ளவர்கள், தொற்று அதிகமாகப் பரவியிருக்கும் பகுதிகளில் வசிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு சோதனை செய்வதற்கு 320 டொலர் மானியம் கிடைக்கலாம்.  மானியம் பெறுவதற்கு, அவர் தொழில் புரிபவராகவும் 17 வயதிற்கும் மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் மற்றும் பிற வருமான ஆதரவுக்குத் தகுதியற்றவர்கள், இப்போது செஞ்சிலுவைச் சங்கம் மூலம் புதிய 400 டொலர் இடர் கால மானியத்தைப் பெறலாம்.

சிட்னியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 12 உள்ளூராட்சிப் பகுதிகளில் கூடுதலாக 530,000 ஃபைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.  இந்தப் பகுதிகளில் வாழும் 20 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வாரம் தடுப்பூசி பெற முன்னுரிமை அளிக்கப்படும்.