ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறக்கும் வகையைச் சேர்ந்த மிகப்பெரும் பல்லியினம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறக்கும் வகையைச் சேர்ந்த மிகப்பெரும் பல்லியினம் என்று கண்டறியப்பட்டுள்ளது. குயின்ஸ்லேண்டில் கடந்த 2011ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இதன் புதைபடிமத்தை ஆய்வு செய்த அறிஞர்கள், இதற்கு “தபுங்கக்கா ஷவி” என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இவை சுமார் 7 மீட்டர் நீளமுள்ள இறக்கைகளுடனும், 1 மீட்டருக்கு கூடுதலான நீளமுடைய கூர்மையான 40 பற்களுடன் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் இது டைனோசர் வகையைச் சேர்ந்தவை அல்ல என்பதையும் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.