இராமலிங்கர் பணி மன்றம், ஏவிஎம் இராஜேஸ்வரி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 51 ஆவது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழாவில், இன்று 3.10.2016 திங்கட் கிழமை மாலை ஐந்து மணிக்கு, அருணகிரி எழுதிய ஆஸ்திரேலியா என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தலைமை ஏற்கிறார்.வழக்கறிஞர் காந்தி முன்னிலை வகிக்கின்றார். இடம்- ஏவிஎம் இராஜேஸ்வரி திருமண மண்டபம், இராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை.
Read More »குமரன்
அவுஸ்திரேலிய பிரஜா உரிமையுடையவர்களின் பெற்றோருக்கான விசா
அவுஸ்திரேலிய அரசாங்கமானது தனது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெற்றோருக்கான புதிய தற்காலிக விசாவை அறிமுகப்படுத்தவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவரும் வகையில் புதிய தற்காலிக பெற்றோர் விசா ஒன்று எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜுலை முதல் அறிமுகப்படுத்தப்படுவதாக அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் அண்மையில் தெரிவித்திருந்தது. அந்த வகையில், இந்த விசா தொடர்பில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 12 விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 1. புதிய தற்காலிக விசாவுடன் பெற்றோர் 5 வருடங்கள் வரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியும். விசா கட்டணம் ...
Read More »கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 34 அடி உயரம் கொண்ட மனிதநேய விளக்கு
குஜராத் மாநிலத்தில் நவராத்திரி திருவிழாவையொட்டி 34 அடி உயரத்துடன் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த ’மனிதநேய விளக்கு’ குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானியால் ஏற்றிவைக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவின்போது, ‘எழுச்சியான குஜராத்’ என்ற விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில், அம்மாநிலத்தில் நடைபெற்றுவரும் விழாவில் 34 அடி உயரம் கொண்ட மனிதநேய விளக்கை அகமதாபாத் நகரில் குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி நேற்றுமாலை ஏற்றிவைத்தார். ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உலோகத்தால் செய்யப்பட்ட இந்த விளக்கின் அடிப்பாகம் 15.8 அடி விட்டம் கொண்டதாகும். உலகின் ...
Read More »விஜய்சேதுபதி சிறப்புப் பேட்டி
தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ‘றெக்க’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றிக்குத் தயாராகி வருகிறார் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாகப் படங்கள் வெளியானாலும் அவரின் பேச்சு எப்போதுமே யதார்த்தத்தின் அழகுடன் வெளிப்படும். அவரிடம் பேசியதிலிருந்து… றெக்க’ மூலமாக நீங்களும் கமர்ஷியல் நாயகனாகிவிட்டீர்களே… ‘றெக்க’ மட்டுமல்ல ‘ஆண்டவன் கட்டளை’ , ‘தர்மதுரை’ இரண்டுமே கமர்ஷியல் படங்கள் தான். ‘றெக்க’யில் காதலைச் சேர்த்து வைக்கிற நபராக நான் நடித்திருக்கிறேன். அதுக்கு ஒரு காரணம் வேண்டாமா? அதனால் காதல் ப்ளாஷ் பேக் இருக்கும். அதை வைத்துத்தான் இக்கதை ...
Read More »அவுஸ்ரேலியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்ரேலியாவை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.தென்ஆப்பிரிக்கா- அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்த ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று (2) 2-வது நாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற அவுஸ்ரேலியா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் டி காக், ரோசவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டி காக் 22 ரன்னிலும், ரோசவ் 75 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த டு பிளிசிஸ் 111 ...
Read More »மெல்பேர்ணில் உணர்வுடன் நடந்தேறிய தியாகதீப கலைமாலை நிகழ்வு-2016
பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்களாக நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து 26-09-1987அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29வது ஆண்டு நினைவுதினமும் கலைமாலை நிகழ்வும் ஒஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் 30-09-2016 வெள்ளிக்கிழமையன்று சென்யூட்ஸ் மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் 26-09-2001 அன்று புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான்வீதியில் சிறிலங்காப்படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் சங்கர் மற்றும் 25-08-2002 அன்று சுகயீனம் காரணமாக ...
Read More »அவுஸ்ரேலியா எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்
ஜோகன்னஸ்பர்க்கில் இன்று(2) நடைபெற்று வரும் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் அம்லா இடம்பெறவில்லை. இது மிகப்பெரிய ஆச்சர்யம் அளிக்கிறது என்று முன்னாள் வீரர் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ந்தேதி செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 295 ரன்களை சேஸிங் செய்யும்போது தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்கள் டி காக் (178), ரொஸவ் (63) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ...
Read More »அப்பிள் நிறுவனத்தின் அடுத்த முயற்சி
ஊடாடும் (Interactive) தொழில்நுட்பம் என்பது வழங்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப வருவிளைவுகளை (Output) தரக்கூடியதாக இருத்தல் ஆகும். இத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு Game Of Thrones Book எனும் புத்தகத்தினை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. Game Of Thrones Book ஆனது அமெரிக்காவினை சேர்ந்த George R.R. Martin எனும் எழுத்தாளரினால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதையாகும். இக் கதை உருவாக்கப்பட்டு இவ் வருடத்துடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதேவேளை இக் கதையினை அடிப்படையாகக் கொண்டு Game Of Thrones எனும் கணணி ...
Read More »யாழ் மாணவி தேசிய சாதனை
யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றுவரும் 24வது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் யாழ்.தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவி ஜெகதீஸ்வரன் அனித்தா(நடு) 3.41மீற்றர் உயரம் தாண்டி தேசிய சாதனை படைத்துள்ளார்.
Read More »பூகோள அரசியலை விளங்கிக் கொள்ளாமல் ஒரு போதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது! – கஜேந்திரகுமார்
தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கோ, மேற்கிற்கோ, சீனாவிற்கோ அடிபணிவதற்குத் தயாராகவிருக்கவில்லை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே போரை நடத்தினார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கோ, மேற்கிற்கோ, சீனாவிற்கோ அடிபணிவதற்குத் தயாராகவிருக்கவில்லை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே போரை நடத்தினார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு எழுதிய “இலங்கை அரசியல் யாப்பு” நூலின் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal