குமரன்

ஆட்கடத்தல்களை தடுப்பதற்கு, அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகள்!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படுகின்ற ஆட்கடத்தல்களை தடுப்பதற்கு, அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக விமான நிலையங்களிலும், விமானங்களிலும் ஆட்கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றவர்களை அடையாளம் கண்டு தடுக்கும் வகையிலான வேலைத்திட்டம் தற்போது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் சிறிலங்கன் விமான சேவையில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. அதற்கான பயிற்சியளிப்புகளும் விமான சேவையாளர்களுக்கு அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்டு வருகிறது.

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு தெங்கு உற்பத்திகளை அதிகளவில் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!

அவுஸ்திரேலியாவிற்கு இலங்கையில் இருந்து தெங்கு உற்பத்திகளை அதிகளவில் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் மெல்பேர்னில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் ஆகியோர், அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். இதில் இலங்கையின் தெங்கு உற்பத்தி ஏற்றுமதியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Read More »

தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை எழுந்து நிற்க மறுத்த சிறுமி!

அவுஸ்திரேலியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை அதற்கு மரியாதை செலுத்துவதற்கு எழுந்து நிற்க மறுத்த 9 வயது சிறுமி தொடர்பில் பெரும் சர்ச்சை மூண்டுள்ளது. ஹாப்பர் நியெல்சன் எனற சிறுமியே இவ்வாறு தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்க மறுத்துள்ளார். தேசிய கீதம் நாட்டின் பூர்வீக மக்களை அவமதிக்கின்றது என கருதியதாலேயே அது இசைக்கப்பட்டவேளை நான் எழுந்து நிற்கவில்லை என அந்த சிறுமி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தேசிய கீதம் வெள்ளையினத்தவர்களை மையமாக கொண்டது சுதேசிய மக்களை முற்றாக புறக்கணிக்கின்றது எனவும் சிறுமி தெரிவித்துள்ளார். சிறுமியின் இந்த கருத்திற்கு வலதுசாரி ...

Read More »

தமிழில் கையெழுத்திடும் இயக்கம் தொடங்கிய நடிகர் ஆரி!

ரெட்டை சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, தரணி, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ஆரி, தமிழில் கையெழுத்திடும் இயக்கத்தை தொடங்கி உள்ளார். ஆரி சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:– ‘‘உலகிற்கே தாய்மொழி நம் தமிழ்மொழி. இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது. இதற்கு காரணம் ஆங்கில கல்வி மோகம்தான். கடந்த ஜூன்மாதம் வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில் நடந்த தமிழர் திருவிழாவில் தமிழில் கையெழுத்திடுவது என்ற முழக்கத்தை தொடங்கி 1119 பேர் கையெழுத்திட்டு புதிய கின்னஸ் உலக சாதனை ...

Read More »

குருந்தூர் மலை பகுதியில் பாரம்பரிய வழிப்பாடுகளில் ஈடுபட அனுமதி!

முல்லைத்தீவு – குருந்தூர் மலை பகுதியில் பாரம்பரிய வழிப்பாடுகளில் ஈடுபட்டு வந்த மக்கள் அங்கு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் குறித்த பகுதியில் பிக்குமார்கள் உள்ளிட்ட சிலர் ஆய்வு செய்வதற்காக சென்றிருந்த நிலையில், அங்குள்ள மக்கள் கூடி அவர்களை அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர். இந்தநிலையில், இது குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது. நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, குறித்த பிக்குமார்கள் உள்ளிட்டவர்களுக்கு அங்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது எனவும் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. அத்துடன், அவர்களை ...

Read More »

ஜெனீவா செல்லவிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் விசா மறுப்பு!

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் 39வது கூட்டத்தொடத் தொடரில் கலந்து கொள்ளும் பொருட்டு அங்கு செல்வதற்கான விசா அனுமதி தமக்கு மறுக்கப்பட்டதாக, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் ;நேற்று 557 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்றைய தினம் அவர்களால் முல்லைத்தீவில் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதன்போதே, முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி ஈஸ்வரி இதனை தெரிவித்துள்ளார். இதனால், ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டத்தொடரில் தம்மால் கலந்து சாட்சியமளிக்க ...

Read More »

குடும்பத்தையும் கொன்றுவிட்டு சடலங்களுடன் 6 நாட்கள் தங்கிய குடும்பத்தலைவர்!

அவுஸ்திரேலியாவில் மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்த கொலையாளி பொலிசில் சரணடைந்துள்ளார். பெர்த்தில் உள்ள வீட்டில் மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் சில தினங்களுக்கு முன்னர் சடலமாக கிடந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் ஐந்து சடலங்களையும் கைப்பற்றிய நிலையில். இறந்தவர்களின் பெயர்கள் மரா (41), பெவர்லி குயின் (73) அலீஸ் (2), பீட்ரிக்ஸ் (2) மற்றும் சரோலேட் (3) என தெரியவந்தது. இந்நிலையில் ஐந்து பேரையும் கொலை செய்ததாக மராவின் கணவர் ஆண்டனி ராபர்ட் (24) காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கூர்மையான ...

Read More »

ஒன்பிளஸ் 6டி மாடலில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 6டி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நாள் முழுக்க பலமுறை ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்கிறோம், ஸ்கிரீன் அன்லாக் இந்த வழிமுறை எண்ணிக்கையை குறைக்கிறது. கூடுதலாக ஃபேஸ் அன்லாக் வசதியை சேர்ப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் மொபைலை அன்லாக் செய்ய ஆப்ஷன்கள் கிடைக்கும்,” என ஒன்பிளஸ் அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில் தெரியவந்துள்ளது. இத்துடன் அக்டோபர் 17 என்ற தேதியும் இடம்பெற்று இருப்பதால் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இந்த தேதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கிரீன் அன்லாக் பெயரில் ஒன்பிளஸ் ...

Read More »

தமிழ் பண்பாட்டின் சின்னமாக விளங்கவல்லவர் எவரோ அவரே தலைமைதாங்க முடியும்!

“கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்ற உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வு ஒன்றினை முன்வைத்துப் பெற முயற்சிப்பது” என்று தனக்கு இருக்கக்கூடிய நான்கு தெரிவுகளில் நான்காவதாக இத்தெரிவை திரு.விக்னேஸ்வரன் முன்வைத்தார். இதுவே தனது அரசியல் பயணத்திற்கான தெரிவென்றும் பிரகடனப்படுத்தினார். மேற்படி தனது நிலைப்பாட்டை கடந்த வாரம் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் அதன் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அறிக்கை வாயிலாக தெரிவித்தார். தளபதிகளும், பிரதானிகளும் குதிரை ...

Read More »

ஐஎஸ்ஐ தான் உலகின் சிறந்த உளவுத்துறை!-இம்ரான் கான்

ஐஎஸ்ஐ தலைமைச் செயலகத்தை முதன் முதலாகப் பார்வையிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் , ஐஎஸ்ஐ உலகிலேயே சிறந்த உளவு ஸ்தாபனம் என்றும் அதுவே தங்களது முதல்வரிசை பாதுகாப்பும் என்று கூறியுள்ளார். பாகிஸ்தானின் இண்டெர் சர்வீஸஸ் இண்டெலிஜென்ஸ் என்பதுதான் ஐஎஸ்ஐ அழைக்கப்படுகிறது. இதற்கு இம்ரான் தன் அமைச்சரவை சகாக்களுடன் வருகை தந்தபோது அதிகாரிகள் பிரதமர் இம்ரானிடம் அவர்களது பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களை விளக்கினர். “பாகிஸ்தான் பிரதமர் ஐஎஸ்ஐ தேசப்பாதுகாப்புக்கு ஆற்றும் சேவையைப் பாராட்டியுள்ளார், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச் செயல்பாடுகளில் ஐஎஸ்ஐ-யின் பாராட்டுக்குரிய செயல்களை விதந்தோதினார். ...

Read More »