ஒன்பிளஸ் நிறுவனத்தின் 6டி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நாள் முழுக்க பலமுறை ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்கிறோம், ஸ்கிரீன் அன்லாக் இந்த வழிமுறை எண்ணிக்கையை குறைக்கிறது. கூடுதலாக ஃபேஸ் அன்லாக் வசதியை சேர்ப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் மொபைலை அன்லாக் செய்ய ஆப்ஷன்கள் கிடைக்கும்,” என ஒன்பிளஸ் அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில் தெரியவந்துள்ளது.
இத்துடன் அக்டோபர் 17 என்ற தேதியும் இடம்பெற்று இருப்பதால் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இந்த தேதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கிரீன் அன்லாக் பெயரில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களிலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் நிலையில், இந்த தொழில்நுட்பத்தை வழங்கும் விவோ ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஹூவாய் நிறுவன மாடல்களுடன் இணைந்திருக்கிறது.