`நான் என் இலக்கை நோக்கிய பயணத்தைத் தனியாகத் தொடங்கினேன். போகும் வழியில் என்னோடு மக்கள் பலர் இணைந்துகொள்ள, நாங்கள் ஒரு வண்டியாக மாறிவிட்டோம்’ என்ற உருதுமொழிக் கவிதையோடு தொடங்குகிறது `கர்வான்’. பயணங்களைப் பற்றிய திரைப்படங்களில் எப்போதும் பயணம் என்பது இடங்களுக்கு இடையில் மட்டும் இல்லாமல், பயணப்படும் மனிதர்களின் ஆழ்மனதை நோக்கியும் இருக்கும். எதிர்பாராத பயணங்கள் மனிதர்களின் ரெகுலாரான வாழ்க்கையிலிருந்து மாறுதல் அளிப்பவை. `கர்வான்’ அதையே பேசுகிறது. சாஃப்ட்வேர் நிறுவனத்தில் மனதுக்குப் பிடிக்காத வேலையையும், கொடுமைக்கார முதலாளியையும் சமாளிக்கும் சராசரி இளைஞன் அவினாஷ் ராஜ்புரோஹித் (துல்கர் சல்மான்). ...
Read More »குமரன்
கிழக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் மக்களின் மழைக்காலம்!
கிழக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் மக்களின் மனதில் மட்டுமே இருந்திருக்கிறது இந்த மழைக்காலம். மழை, மழையிலிருந்து புறப்படும் மண்வாசம், அந்த மண்வாசம் தரும் நினைவுகள் என எதுவும் இவ்வாண்டு கிழக்கு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் வாழும் மக்களுக்கு இல்லை. அந்த அளவுக்கு கோடை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வறட்சியானது மிக மோசமாக வேளாண் பண்ணைகளை பாதித்து இருக்கிறது. வானிலிருந்து ராய்ட்டர்ஸ் புகைப்பட கலைஞர் டேவிட் கிரே எடுத்திருக்கும் புகைப்படமானது இந்த வறட்சியின் பாதிப்பை அதே அடர்த்தியில் நமக்கு உணர்த்துகிறது. அந்த புகைப்படங்களை இங்கே இங்கு ...
Read More »அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை!
அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன் கூறியுள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்த முயன்ற விவகாரம் தொடர்பில் ஊடகங்கள் அவுஸ்திரேலிய வீரர்கள் களத்தில் நடந்துகொள்ளும் விதத்தினை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து இந்த சர்ச்சையின் பின் தனது பதவியை இராஜினாமா செய்த லீமன் ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.
Read More »பொருளாதார தடைக்கு ஒருநாள் முன்னதாக 5 புதிய விமானங்களை வாங்கிய ஈரான்!
அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் அமலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக 5 புதிய விமாங்களை ஈரான் வாங்கியுள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது. ஆனால், கடந்த 2017-ம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் கூட்டு நிறுவனமான ஏடிஆர் உடன் 72-600 ...
Read More »வடக்குக்கென ஒரு பாரம்பரியம் இருந்து அதனை போர்ப் பாதிப்பு குழப்பியுள்ளது!
கல்வி கற்பித்தலில், வடக்குக்கென ஒரு பாரம்பரியம் இருந்து வந்தது என்று தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், போர்க்காலமும் போர்ப் பாதிப்பும் அதனைக் குழப்பிவிட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். ஆனால், வடமாகாணப் பாடசாலைகளில் பணிபுரிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்துகொண்டு செல்ல வேண்டுமென, அவர் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணிபுரிவதற்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் பொதுநூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று (05) நடைபெற்ற போது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட முதலமைச்சர், “கல்வி தான் எமது ஒரேயொரு ...
Read More »சம்பந்தனினதும் மாவையினதும் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டுமெனக் கோரியுள்ள, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, தேசத்ரோகக் குற்றத்துக்காக அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார். அறிக்கையொன்றை நேற்று (05) வெளியிட்டுள்ள ஆனந்தசங்கரி, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாகவும், மிகக் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தினார். அத்தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை, தமிழரசுக் ...
Read More »இறுதி வாக்குமூலத்தை சுமந்து வரும் ஈழத்தின் புதை குழிகளும், எலும்புக் கூடுகளும்!
1996இல் இலங்கை இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றியபோது ஊர் பாக்கவும் பஞ்சத்தில் வயிறு வளர்க்கவும் கிளிநொச்சிக்கு வந்தவர்களை இலங்கை இராணுவம் கொன்று புதைத்தது. மிகவும் கொடூரமாக அவர்கள் சித்திரவதை புரிந்து கொல்லப்பட்டார்கள். அதில் காயங்களுடன் இராணுவத்தினரிடமிருந்து சாதுரியமாக தப்பியவர்களும் உண்டு. திரும்பி வருவார் என்று ஊருக்குச் சென்றவர்கள் பலரும் காணாமல் போயினர். இதன் விளைவாக 2000ஆம் ஆண்டில் ஆனையிறவு மீட்புடன் கிளிநொச்சி திரும்பியபோது பலரது வீட்டு கிணறுகளிலும் மலசல கூடங்களிலும் எலும்புக்கூடுகளே காத்திருந்தன. அந்தக் காட்சி இப்போதும் நினைவில் இருக்கிறது. கந்தபுரம் தமிழீழ காவல்துறை அலுவலகத்தில் ...
Read More »ஸ்கைப்பில் புதிய வசதி!
மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்கைப் சேவை இணைய தொலைபேசி வசதியில் பிரபலம். தற்போது இணையத் தொலைபேசி சேவையான ஸ்கைப்பில் குரல் பதிவு வசதி அறிமுகமாகியுள்ளது. உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டு கிளவுட்டில் சேமிக்கப்படும். டெஸ்க்டாப், ஸ்மார்ட்போனில் இந்த வசதியைப் பெறலாம். மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்றாலும் ஸ்கைப் முதன்முறையாக நேரடியாக இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. குரல் பதிவு செய்யப்படுவது பயனாளிகளுக்கு உணர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »தடுப்பு முகாமிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிக் குடும்பம்!
நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தையை நவுறு தடுப்பு முகாமிலிருந்து பெற்றோருடன் மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் சிட்னி கொண்டுவர அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மெல்போர்ன் பெடரல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த குழந்தையை அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படா நிலையில், தாய்வான் கொண்டுசெல்ல முடியும் என அவுஸ்திரேலிய அரசு தெரிவித்திருந்தது. இவ்விடயத்தை அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் தாய்வானில் குழந்தைக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் ...
Read More »இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் பயங்கர நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.0 என்று பதிவாகியிருப்பதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 10 கிமீ ஆழத்திலேயே இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கடலோரம் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு அங்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். “மக்கள் கடற்கரைக்கு அருகில் இருக்க வேண்டாம், உயரமான பகுதிகளுக்குச் செல்லவும் அமைதியாக இருக்கவும் பதற்றம் வேண்டாம்” என்று புவியியல், வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் த்விகோரிட்டா கர்ணாவடி உள்ளூர் தொலைக்காட்சியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். லோம்போக் தீவின் முக்கிய நகரமான மடாரம்மில் கடுமையான அதிர்வை ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			