உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பானவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் இதனுடன் தொடர்புபடாதவர்களை அவதிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் முக்கிய காரணி என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Read More »குமரன்
அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது!
நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தை, இனியும் நீடிக்கப்போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், ஏ.எச்.எம். பௌஸி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா உள்ளிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (09) இரவு இடம்பெற்றது. இதன்போது, நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இலக்கு ...
Read More »கைவிடப்பட்ட கதை?
ஜனாதிபதி தேர்தலுக்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. வேட்பாளர்களாக களமிறங்கக்கூடியவர்கள் குறித்து அறிகுறிகள் காட்டப்படுகின்றனவே தவிர, திட்டவட்டமான அறிவிப்புகள் இதுவரையில் இல்லை. ஆனால், தேர்தலுக்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகள் அல்லது கூட்டணிகள் அவற்றின் வேட்பாளர்களை அறிவிப்பதில் நீண்ட தாமதத்தைக் காட்டமுடியாதநிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இத்தடவை ஜனாதிபதி தேர்தலில் கட்சிகளினால் முன்வைக்கப்படக்கூடிய பிரதான பிரச்சினை எதுவாக இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் ஜனாதிபதி தேர்தல்களில் பிரதான பிரசாரப்பொருளாக இருந்த ‘ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ...
Read More »எளிய வாழ்க்கையை விரும்பும் நடிகை!
சாதாரணமான எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புவதாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை தெரிவித்துள்ளார். ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘த அயன்லேடி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார் நித்யாமேனன். சைக்கோ என்ற இன்னொரு தமிழ் படத்திலும் நடிக்கிறார். ‘மிஷின் மங்கல்’ என்ற படம் மூலம் இந்திக்கு போய் உள்ளார். மலையாளத்திலும் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார். நித்யா மேனன் அளித்த பேட்டி வருமாறு:- “நடிகர்-நடிகைகளை ரசிகர்கள் பார்க்கும் கோணம் வேறு. எங்களை நாங்களே பார்த்துக் கொள்ளும் கோணம் வேறு. பிரபலமான நடிகை ...
Read More »மாணவர்கள் கடத்தப்பட்டமையை அறிந்திருந்தேன்!
தெஹிவளையில் 5 மாணவர்கள் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்தார் என்பதை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பு பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேர் குறித்து விசாரித்து வரும் குற்ற விசாரணைப் பிரிவு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் அளித்துள்ள ‘பி’ அறிக்கையிலேயே இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. தமது விசாரணைகளின்போதே தெஹிவளையில் 5 மாணவர்கள் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்தார் என்பதை அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக்கொண்டார் ...
Read More »விக்கி மீண்டும் சம்மந்தனோடு மீள இணைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை !
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனால் கொண்டுவரப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்; மீண்டும் சம்மந்தனோடு பேசி கூட்டமைப்பில் மீள இணைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அது சாத்தியமாகுமா என்பது குறித்தும் எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் எங்கள் இனத்தின் தலைமைத்துவ வித்துவக் காய்ச்சல் இதற்கு வாய்ப்பளிக்காது என்றே நம்புகின்றேன். என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ர துணைத்தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வடக்கு ...
Read More »ஆஸ்திரேலிய அணியில் இருந்து கவாஜா விலகல்!
உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கவாஜா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மேத்யூ வடே சேர்க்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்தது. அந்த அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா இடம்பிடித்திருந்தார். தற்போது அவருக்கு ஹாம்ஸ்டிரிங் (தொடைப்பகுதியில்) இன்ஜூரி ஏற்பட்டுள்ளதால் அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வடேவை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது ...
Read More »அஸ்கர் தேர்வுக்குழுவில் இந்தியர்கள்!
உலகின் உயரிய விருதாக கருதப்படும் அஸ்கர் விருதின் தேர்வுக்குழுவில் இந்திய பிரபலங்கள் சிலர் இடம் பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும். அடுத்த ஆண்டிற்கான ஆஸ்கர் விழா பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான தேர்வுக் குழுவினர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை தற்போது ஆஸ்கர் குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 59 நாடுகளைச் சேர்ந்த 842 புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஆஸ்கர் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ...
Read More »மனங்களைவிட்டு நீங்காத திருமலை படுகொலை!
2006 ஆம் ஆண்டு திருகோணமலையை கதிகலங்க வைத்த 5 மாணவர் படுகொலையோடு சம்பந்தப்பட்டதாக கருதி கைதுசெய்யப்பட்டு கடந்த 6 வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்த 12 அதிரடிப்படையினரும் சுமார் 13 வருடங்களுக்குப்பிறகு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை (3.7.2019) விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களின் விடுதலைக்கான தீர்ப்பை திருகோணமலை நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி முகமட் ஹம்சா வழங்கியுள்ளார். வழக்கு தொடுநர் சார்பாக முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு போதுமானதாக அமையாத காரணத்தினால் இவ்வழக்கிலிருந்து 13 எதிரிகளையும் விடுவிப்பதாக திருமலை நீதவான் ...
Read More »அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற மாட்டேன்!
பிடிபட்டால் அவ்வளவுதான், நாடு கடத்தி விடுவார்கள் என்று கூறும் இந்திய இளைஞர் ஒருவர், நான் எந்த தவறும் செய்யவில்லை, அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற மாட்டேன் என்று அடம்பிடித்து வருகிறார். மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர் குமார். பத்து ஆண்டுகளாகிவிட்டது அவர் அவுஸ்திரேலியாவுக்கு வந்து. மாணவர் விசா காலாவதியானதும், spousal விசாவுக்கு முயற்சி செய்யும் நேரத்தில் காதலியைப் பிரிய வேண்டியதாயிற்று. புதிய விசா பரிசீலனையிலிருக்கும்போது குமார் நாட்டை விட்டு வெளியேற மறுத்ததால், விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடிவு செய்தார் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal