உலகின் உயரிய விருதாக கருதப்படும் அஸ்கர் விருதின் தேர்வுக்குழுவில் இந்திய பிரபலங்கள் சிலர் இடம் பெற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும். அடுத்த ஆண்டிற்கான ஆஸ்கர் விழா பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான தேர்வுக் குழுவினர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை தற்போது ஆஸ்கர் குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி 59 நாடுகளைச் சேர்ந்த 842 புதிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஆஸ்கர் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் அனுராக் கஷ்யப், ஜோயா அக்தர், அனுபம் கேர் மற்றும் ரித்தேஷ் பத்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal