சாதாரணமான எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புவதாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘த அயன்லேடி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார் நித்யாமேனன். சைக்கோ என்ற இன்னொரு தமிழ் படத்திலும் நடிக்கிறார். ‘மிஷின் மங்கல்’ என்ற படம் மூலம் இந்திக்கு போய் உள்ளார். மலையாளத்திலும் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
நித்யா மேனன் அளித்த பேட்டி வருமாறு:- “நடிகர்-நடிகைகளை ரசிகர்கள் பார்க்கும் கோணம் வேறு. எங்களை நாங்களே பார்த்துக் கொள்ளும் கோணம் வேறு. பிரபலமான நடிகை என்ற உணர்வு எனக்கு இல்லை. சாதாரண பெண்ணாகவே என்னை பார்க்கிறேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனியாக இருக்கும்போது மற்றவர்களைபோல் நானும் ஒரு பெண் என்றுதான் சிந்திப்பேன்.
நடிகை என்ற ரீதியின் ரசிகர்களுக்கு என்மீது எதிர்பார்ப்புகள் இருக்கலாம். வெளியே இருந்து என்னை ஒரு நடிகையாக பார்த்து ஏற்படுத்திகொண்ட எண்ணங்கள் அவை. ஆனால் என்னை பொறுத்தவரை நடிகை நித்யாவாக இல்லாமல் சாதாரணமான எளிமையான நித்யாவாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.
படப்பிடிப்பில் வேலை செய்து சோர்வாகும் போதெல்லாம் இயற்கை எனக்கு சக்தி கொடுக்கிறது. நம்மோடு நாம் தொடர்பு கொண்டால்தான் இயற்கையோடு தொடர்பு கொள்ள முடியும். எனக்கு தேவையான சக்தி எல்லாவற்றையும் இயற்கையில் இருந்துதான் எடுத்துக்கொள்கிறேன். இயற்கையை மட்டுமே எனது வாழ்வின் வழிகாட்டியாக பார்க்கிறேன்.” இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.
Eelamurasu Australia Online News Portal