குமரன்

வவுனியாவில் வெடிக்காத நிலையில் இரு மோட்டார் குண்டுகள் மீட்பு!

வவுனியா நெடுங்கேணியில் நேற்று மாலை விறகு வெட்ட காட்டுக்குச் சென்ற இருவர் வெடிக்காத நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகளை அவதானித்துள்ளனர். இதையடுத்து நெடுங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு அக் குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்கு விஷேட அதிரடிப்படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 4மணியளவில் நெடுங்கேணி ஜயனார் கோவிலுக்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதிக்கு இருவர் விறகு வெட்டுவதற்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் மரம் ஒன்றில் இறுகிய நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகள் வெடிக்காத நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நெடுங்கேணிகாவல் துறைக்கு தகவல் வழங்கப்பட்டு ...

Read More »

மசூதியில் துப்பாக்கி சூடு- ஆஸ்திரேலிய நபருக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல்!

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபரை ஏப்ரல் 5-ம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த  சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, கொலை குற்றம்சாட்டப்பட்ட பிரென்டன் டாரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வெள்ளை நிற சட்டை அணிந்து இருந்த அவர், கைவிலங்கு அணிவித்தபடி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிரென்டன் டாரன்ட் ஜாமீன் ...

Read More »

இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்!

இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கைப் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ், இப்போது தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சாவித்திரியாக ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்த பிறகு அவரது மார்க்கெட் மற்றும் சம்பளம் ...

Read More »

தமிழ் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள்!

ஜெனீவாத் திருவிழா, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதே பத்தியில் சில காலத்துக்கு முன்னர் சொன்னது போல, ‘அடுத்தது என்ன’ என்ற கேள்விக்கு ‘அடுத்த ஜெனீவா’ பதிலாகக் கிடைத்துள்ளது. சர்வதேசத்தின் பெயரால், இன்னமும் எவ்வளவு காலத்துக்குத் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்பதற்கு, காலம்தான் பதில் சொல்ல வேண்டும். முழு மேற்குலகும், தமிழ் மக்களின் பக்கத்தில் நிற்கிறது என்று, கடந்த பத்தாண்டுகளாக எமக்குச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், மேற்குலகு இதுவரை தமிழ் மக்கள்தொடர்பில், எவ்வாறு நடந்து வந்துள்ளது? குறிப்பாக, 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர், என்று விசாரித்தால், ...

Read More »

நியூசிலாந்து மசூதியில் தாக்குதல் நடத்தியது ஆஸ்திரேலிய பயங்கரவாதி!

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 ...

Read More »

நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கி சூடு- 27 பேர் பலியானதாக தகவல்!

நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த ஆசாமி, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர். தாக்குதல் பற்றி காவல்துறைக்கு தகவல் ...

Read More »

இலங்கை பிரஜைகளிற்கு பாதிப்பா? தகவல்களை பெற முயற்சி!

நியுசிலாந்தில்  இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கை பிரஜகைள் எவருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் பிரதி தூதுவர் செனரத் திசநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பிரஜைகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக துப்பாக்கி பிரயோகம் குறித்த தகவல்கள் அனைத்தையும் ஆராய்ந்து வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

ஆளுநரிடம் மகஜரை கையளித்திருப்பது பாரதூரமானது!

பெருபான்மை அரசால் நியமிக்கபடும் ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருப்பது பிழையானதுடன், பாரதூரமானது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.   வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 754 நாட்களாக  தொடர் போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள்  நேற்றைய(14) தினம் நடத்திய ஊடாக சந்திப்பிலேயே மேற்படி தெரிவித்தனர். மேலும் கருத்து தெரிவிக்கையில், காணாமல் ஆக்கபட்ட உறவுகள் வடக்கு ஆளுனரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். பெருபான்மை அரசால் நியமிக்கப்படும் ஆளுநரிடம் மகஜரை கையளித்திருப்பது பிழையானதுடன், பாரதூரமானது. இங்கிருந்து பலர் ஜெனிவா சென்றுள்ள நிலையில் ஆளுநரிடம் ...

Read More »

மாதவன் படத்தில் சூர்யா, ஷாருக்கான்!

மாதவன் இயக்கி நடிக்கும் நம்பி நாராயணனின் வாழ்க்கைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா மற்றும் ஷாருக்கான் ஒப்பந்தமாகி இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யா – மாதவன் இணைந்து நடித்து இருந்தனர். தற்போது 15 வருடங்களுக்கு பிறகு சூர்யாவும், மாதவனும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். மாதவன் தற்போது இயக்கி நடித்து வரும் திரைப்படம் ராக்கெட்ரி: நம்பி விளைவு. ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை ...

Read More »

முன்னாள் போராளி வாழ்வாதாரத்துக்கு போராடும் அவலம்!

புதிய ஊன்றுகோல் ஒன்றினை வாங்குவதற்கு வசதியற்றிருக்கும் ஜெகன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி. நந்திக் கடல் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்ட போது, தமது இடது காலினை அவர் இழந்தார். தன் 15ஆவது வயதில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து 7 ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடிய அந்த இளைஞன், இப்போது அன்றாட உணவுக்கான வருமானத்தைத் தேடிக் கொள்வதற்கே மிகவும் போராடுகிறார். இலங்கை அம்பாறை மாவட்டம் – விநாயகபுரத்தில் மனைவி மற்றும் இரண்டு வயது ...

Read More »