குமரன்

ஹஜ் பயணத்தின் போது விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நவாஸ் செரீப் உறவினர்கள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் உறவினர்கள் ஹஜ் பயணத்தின் போது விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் உறவினர்கள் யூசுப் அப்பாஸ் மற்றும் அப்பதுல் அஜிஸ். சகோதரர்கள் ஆன இருவரும் நேற்று முன்தினம் ஹஜ் புனித பயணத்திற்காக லாகூரில் இருந்து மதினா செல்லும் விமானத்தில் ஏறி இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு முன்பாக குடியுரிமை அதிகாரிகள், அவர்கள் பயணத்தை தடுத்து நிறுத்தி இருவரையும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர். பாகிஸ்தான் குடியுரிமை சட்டத்தில் சமீபத்தில் இணைக்கப்பட்ட புதிய ...

Read More »

வவுனியாவில் பொருத்தப்பட்ட 5ஜி கோபுரம்!

வவுனியா திருவாற்குளம் விளையாட்டு மைதானம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5ஜி கோபுரம் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 5ஜி கோபுரம் என்று உறுதிப்படுத்தப்பட்டு ஆவணம் வழங்கும்பட்சத்தில் அக்கோபுரம் உடனடியாக அங்கிருந்து தூக்கி எறியப்படும் என்று வவுனியா நகரசபை உறுப்பினர்  சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபைக்குட்பட்ட நகர்ப்பகுதிகளான பண்டாரிக்குளம், திருநாவற்குளம் ஆகிய பகுதிகளில் 5ஜி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தைச் சூழவுள்ள குடும்பங்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படவாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றதுடன் 5ஜி கோபுர வலையமைப்பினால் உடல், உள ...

Read More »

இருப்புக்கான போராட்டம்!

தமிழர் தரப்பு அர­சி­ய­லுக்கு வெளி­யிலும் முட்­டுக்­கட்­டைகள். உள்­ளேயும் பல முட்­டுக்­கட்­டைகள். இந்த முட்­டுக்­கட்­டை­களைக் கடந்து நாட­ளா­விய அர­சியல் வெளியில் உறு­தி­யா­கவும் வலு­வா­கவும் அது காலடி எடுத்து வைக்க வேண்­டி­யது அவ­சியம். இது காலத்தின் தேவை­யும்­கூட. ஏழு தசாப்­தங்­க­ளாக மறுக்­கப்­பட்டு வந்­துள்ள தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் உரி­மை­களை, அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக உறு­திப்­ப­டுத்தி, அவற்றைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஆட்­சி­யா­ளர்கள் மறுத்து வரு­கின்­றனர். தொடர்ச்­சி­யாக அதனை அவர்கள் உதா­சீனம் செய்­வதே வர­லா­றாக உள்­ளது. தமிழ் மக்­களும் இந்த நாட்டின் குடி­மக்கள், அவர்கள் சகல உரி­மை­க­ளுக்கும் உரித்­து­டை­ய­வர்கள், அவர்கள் சிறு­பான்­மை­யாக ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கு தொடர்பா?

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உரிமை கோரியிருந்தார் ஆனால் உண்மையில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு அதன் விசேட கண்காணிப்பாளர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை முன்னெடுத்த தேசிய தவ்ஹீத் ஜமாத்தும் ஜேஎம்டீ அமைப்பு 2014 இல் உருவாக்கப்பட்டவை என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது. தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தாக்குதலிற்கு முன்னர் 50 ...

Read More »

“பிக்பாஸ் வீட்டை விட்டு உடனே வெளியேறுங்கள்”: சேரனுக்காக உருகும் வசந்த பாலன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) நிகழ்வின்போது, போட்டியாளர்கள் சரவணன் மற்றும் சேரன் இடையே மோதல் வெடித்தது. இச்சூழலில், இயக்குநர் வசந்த பாலன், பிக்பாஸ் வீட்டைவிட்டு சேரன் வெளியேற வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுகுறித்து வசந்த பாலன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும். காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்த செய்தி ஊடேறி உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன். உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன். வித்யாகர்வத்துடன், நீங்கள் இருந்த இடம் மிக ...

Read More »

கைதிகளை வாக­னத்தில் மாற்றும்போது விப­ரீதம் : 4 கைதிகள் மூச்சுத் திணறி பலி!

வட பிரே­சிலில் கல­வரம் இடம்­பெற்ற சிறைச்­சா­லை­யொன்­றி­லி­ருந்து வாக­ன­மொன்றில் கொண்டு செல்­லப்­பட்ட  4 கைதிகள்  மூச்சுத் திணறி உயி­ரி­ழந்­துள்­ளனர். பரா பிராந்­தி­யத்தில் அள­வுக்­க­தி­கமான கைதி­களைக் கொண்ட சிறைச்­சா­லையில்  இரு எதிர்க் குழுக்­களைச் சேர்ந்த கைதி­க­ளி­டையே  நேற்று முன்­தினம் இடம்­பெற்ற கல­வ­ரத்தில் 57  கைதிகள்  உய­ிரி­ழந்­துள்ள நிலையில்  அந்த சிறைச்­சா­லை­யி­லி­ருந்து  அபா­ய­க­ர­மான சில கைதி­களை  வேறு சிறைச்­சா­லைக்கு இட­மாற்றும் நட­வ­டிக்கை  நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இதனையடுத்து ட்ரக் வண்­டியில் அமைக்­கப்­பட்ட கைதி­க­ளுக்­கான 4 வேறு­பட்ட பிரி­வு­களில் 30 கைதிகள் கொண்­டு­செல்­லப்­பட்­டனர். இதன்­போதே 4 கைதிகள் மூச்சுத் ...

Read More »

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்தும் மோடி அரசாங்கம்!

இந்தியாவின் 2005 தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு திருத்தம் ஒன்றை கடந்தவாரம் பாராளுமன்றம் நிறைவேற்றியிருக்கிறது. அந்த திருத்தம் மத்தியிலும் மாநில மட்டங்களிலும் தகவல் ஆணையாளர்களின் சுயாதீனத்தை பலவீனப்படுத்தியிருப்பதுடன் மத்தியில் சகல அதிகாரங்களையும் குவித்ததன் மூலம் மாநிலங்களின் உரிமைகளை அரித்திருக்கிறது.   பாரதிய ஜனதா கட்சியும் அதன் நேசக்கட்சிகளும் பாராளுமன்றத்தில் கொண்டிருக்கும் வலிமையான பெரும்பான்மையின் விளைவாக நிறைவேற்றப்பட்ட திருத்தத்தை காங்கிரஸ், திரிநாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை கடுமையாக எதிர்த்தன. திருத்தம் தகவல் ஆணையாளர்களின் நிர்ணயிக்கப்பட்ட ஐந்து வருட பதவிக்காலத்தை நீக்குகிறது ...

Read More »

பிரியங்கா சோப்பராவின் பிறந்தநாள் கேக்கின் பெறுமதி தெரியுமா ?

பொலிவூட்டில் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா தனது பிறந்தநாளுக்காக ரூபா 8.8 லட்சத்திற்கு கேக் வெட்டியுள்ளார்.   கடந்த 2000 இல் உலக அழகி பட்டம் பெற்றவர் பிரியங்கா சோப்ரா. “தமிழன் என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். படம் சரியாக போகாத காரணத்தால் ராசியில்லாத நடிகை என்று ஒதுக்கப் பட்டார். ஆனால் பொலிவூட் இவரை கைவிடவில்லை. தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வந்தார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரானார். இவரது பெரும்பாலான படங்கள் பல விருதுகளை வாங்கிக் ...

Read More »

சஹ்­ரானை நாம் நெருங்­கினோம் சூட்­சு­ம­மாக தப்பிக்கொண்டார்!

சஹ்ரான் குறித்து பல இடங்­களில் தேடி அவரை நெருங்­கினோம். ஆனால் அவர் சூட்சு­ம­மாக எம்­மிடம் இருந்து தப்­பித்­துக்­கொண்டார் என  உயிர்த்த ஞாயிறு  தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தும் நாடாளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின்  பதில் பணிப்­பாளர் ஜகத் விசாந்த  நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார். நாடா­ளு­மன்ற கட்­டட தொகு­தியில் நேற்று நடை­பெற்ற  அமர்­வி­லேயே அவர் இவ்­வாறு சாட்­சி­ய­ம­ளித்தார். அவர் மேலும்  சாட்­சி­ய­ம­ளிக்­கையில், கேள்வி :- உங்­களின் பதவி என்ன ? பதில் :- எஸ்.எஸ்.பி கேள்வி:- ரி.ஐ.ரி யினால் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் குறித்து முதலில் ...

Read More »

30ஆம் ஆண்டுகளை கடந்த வல்வை படுகொலை!

வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து   புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழைமை போல தொடங்கியது. ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து ...

Read More »