பிரியங்கா சோப்பராவின் பிறந்தநாள் கேக்கின் பெறுமதி தெரியுமா ?

பொலிவூட்டில் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா தனது பிறந்தநாளுக்காக ரூபா 8.8 லட்சத்திற்கு கேக் வெட்டியுள்ளார்.

 

கடந்த 2000 இல் உலக அழகி பட்டம் பெற்றவர் பிரியங்கா சோப்ரா. “தமிழன் என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

படம் சரியாக போகாத காரணத்தால் ராசியில்லாத நடிகை என்று ஒதுக்கப் பட்டார். ஆனால் பொலிவூட் இவரை கைவிடவில்லை. தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வந்தார்.

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரானார். இவரது பெரும்பாலான படங்கள் பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளன. 2016 ஆம் வருடம் இந்திய அரசாங்கம் இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இவர் நடித்த “த ஸ்கை இஸ் பிங்க்” என்ற படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. பிரியங்கா பொலிவூட்டில் இருந்து ஹொலிவூட் சென்று அங்கும் வெற்றிக்கொடி நாட்டினார். ஹொலிவூட் படங்கள் மற்றும் நாடகங்களில் தற்போது நடித்து வருகிறார். அவர் ஹொலிவூட் பிரபலம் நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரியங்கா சமீபத்தில் தன்னுடைய 37வது பிறந்தநாளை கணவருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அதற்காக 4 அடி உயரத்திற்கு 5 அடுக்குகள் கொண்ட கேக்கை வாங்கியிருந்தார் அவரது கணவர் நிக் ஜோனஸ்.

டிவாய்ன் டெலகசி  கேக் (Divine Delicacies Cakes) என்ற நிறுவனம் செய்த இந்த சொக்லேட் கேக்கின் விலை சுமார் 5000 டொலர்கள்.

இலங்கை மதிப்பீட்டின படி 8.8 லட்சம் ரூபாய். இந்திய மதிப்பீட்டின் படி சுமார் மூன்றரை லட்சம் ரூபாய். இந்த செய்தியை கேள்விப்பட்ட திரையுலகமும் ரசிகர்களும் இத்தனை லட்சத்தில் கேக்கா என தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்று சொல்லலாம்.