குமரன்

ஃபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் வசதி!

ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதிக்கான சோதனை துவங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம். ஃபேஸ்புக் எஃப்8 2018 டெவலப்பர் நிகழ்வில் மெசஞ்சர் செயலி முழுமையாக மாற்றப்படுவதாக அந்நிறுவனம் கடந்த ஆண்டின் மே மாதத்தில் அறிவித்திருந்தது. அன்று முதல் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு மாற்றங்களை உலகின் வெவ்வேறு பகுதிகளில் படிப்படியாக மேற்கொண்டு வருகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தகவல் பரிமாற்றத்திற்கென மெசஞ்சர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மெசஞ்சரில் டார்க் மோட் வசதியை வழங்குவதாக ஃபேஸ்புக் கடந்த ...

Read More »

சிட்னியில் வரலாறு படைக்குமா இந்திய அணி?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி நாளை கடைசி டெஸ்டில் களம் இறங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டு மற்றும் மெல்போர்னில் நடந்த டெஸ்டுகளில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் ...

Read More »

அரசியலமைப்பின் இறுதி வரைவிலும் ‘ஒருமித்த நாடு’ என்ற சொல் வரும் – சம்பந்தன்

“ஏக்­கிய ராஜ்­ஜிய என்றால் ஒரு­மித்த நாடு என்றே புதிய அர­சியல­மைப்பு வரை­வுக்­கான இடைக்­கால அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது. இறுதி அர­ச­மைப்­பிலும் அது அவ்­வாறே இடம்­பெறும் என்று நம்­பு­கின்றோம். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அதற்­கான உறு­தி­மொ­ழியை வழங்­கி­யுள்ளார்” என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். அர­ச­மைப்பில் ஏக்­கிய ராஜ்­ஜிய என்ற சொல் மூன்று மொழி­க­ளிலும் இருக்கும். அதில் எந்­த­வொரு மாற்­றமும் செய்­யப்­ப­டாது. ஏக்­கிய ராஜ்­ஜி­ய­வுக்கு தமிழில் ஒரு­மித்த நாடு என்ற பதத்தை இணைக்­கு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­ட­போ­திலும் அது ஏற்றுக்கொள்­ளப்­ப­ட­வில்லை’ என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் ...

Read More »

ஊடக சுதந்திரத்தில் சிறிலங்கா முன்னேற்றம்!

எல்லைகளற்ற நிருபர் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக சுதந்திரம் தொடர்பான வருடாந்த சுட்டியில் சிறிலங்கா முன்னேற்றமடைந்துள்ளது.   வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, கடந்த 2017 ஆம் ஆண்டில் 141 ஆவது இடத்தில் இருந்து இலங்கை கடந்த 2018 ஆம் ஆண்டில் 131 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த சுட்டியின்படி, உலகில் ஊடக சுதந்திரம் கூடுதலாக உள்ள நாடு நோர்வே ஆகும். ஊடக சுதந்திரம் மிகவும் குறைவாகபேணப்படும் நாடாக எரித்திரியாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இந்தியா 138 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 146 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 139 ...

Read More »

“புற்று நோய் எனக்குக் கிடைத்த பரிசு” – மனிஷா கொய்ராலா உருக்கம்

தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்த கடுமையான நினைவுகள்குறித்து, தன் சுய சரிதைப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார், நடிகை மனிஷா கொய்ராலா. மனிஷா கொய்ராலா, 1990-களில் தமிழ், இந்தித் திரையுலகைக் கலக்கியவர்.  வினு வினோத் சோப்ரா இயக்கத்தில் வெளியான `1942 லவ் ஸ்டோரி’ இந்திப் படம் அடையாளம் கொடுத்தது. மணிரத்னத்தின் `பம்பாய்’, சங்கரின் `இந்தியன்’ படங்கள் மனிஷாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நிறைய இந்திப் படங்களில் நடித்தார்.  பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த மனிஷா, சில வருடங்களுக்கு முன்பு  கர்ப்பப்பை புற்று நோயால் ...

Read More »

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்!

அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஷியா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா-ரஷியா இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக அர்ஜென்டினாவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் புதினுடனான சந்திப்பை டிரம்ப் தவிர்த்துவிட்டார். இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார். அந்த ...

Read More »

சீமான் – சத்யராஜ் நடிக்கும் கடவுள் 2

‘கடவுள்’ படத்தை இயக்கிய வேலு பிரபாகரன் தற்போது ‘கடவுள்’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கிவரும் நிலையில், அதில் சீமான், சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கின்றனர். நாளைய மனிதன், அசுரன், ராஜாளி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கி அருண்பாண்டியன், ரோஜா நடிப்பில் வெளியான கடவுள் படம் வெற்றி பெற்றதோடு தமிழ்நாடு அரசின் சிறந்த வசனகர்த்தா விருது வென்றது. இந்த படத்தில் கடவுள் மனித அவதாரம் எடுப்பது போன்ற கதை இருந்தது. கடவுள் படத்தின் 2-ம் பாகத்தை வேலு பிரபாகரன், கடவுள் ...

Read More »

எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்க மாட்டேன்!

ஐக்கிய மக்கள் சுதந்திர  முன்னணியின்  மூத்த உறுப்பினர்களிலுள் ஒருவரான களுத்துறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமர்று சபாநாயகருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின்  பாதுகாப்பு ஒருங்கினைப்பு  எழுத்து  மூலமாக  கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தான் ஒருபோதும் எதிர்கட்சி தலைவர்  பதவியை பொறுப்பேற்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். பிரதான எதிர்கட்சி தலைவர்  பதவியை  குமார வெல்கமவிற்கு  வழங்குமாறு    ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  பாதுகாப்பு இயக்கத்தின்  ஒருங்கினைப்பாளர்  சபாநாயகருக்கு  விடுத்துள்ள கோரிக்கை  தொடர்பில் வினவிய போதே  அவர் ...

Read More »

சிறிலங்காவின் நீதித்துறை அமெரிக்க உதவியுடன் …..!

மக்களின் தேவைகளை சிறப்பான முறையில் நிறைவேற்றுவதற்காக நீதித்துறையின் நேர்மையையும்  ஆற்றலையும் மேம்படுத்தி நீதிமன்ற நிருவாகத்தை சிறப்பானதாக்குவதற்கான ஏற்பாடுகளில் நீதியமைச்சுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் ( யூ.எஸ்.எயிட்) உதவிசெய்யவிருப்பதாக சட்டத்துறை மற்றும் அமைச்சு  வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இது விடயத்தில்  நீதியமைச்சு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்ட உதவி ஆணைக்குழு, மாகாண சட்டத்தரணிகள் சங்கங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், முக்கியமான அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து யூ.எஸ்.எயிட் பணியாற்றும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Read More »

சிட்னி – மெல்பேர்ன் 40 நிமிடங்களில் பயணம்?

சிட்னிக்கும் மெல்பேர்னுக்கும் இடையில் 40 நிமிடங்களில் பயணிக்கக்கூடிய Hyperloop Transportation அதிவேக ரயில் சேவை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த ரயில் சேவையை அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையில் நிர்மாணிப்பது குறித்த யோசனை மீண்டுமொரு தடவை அவுஸ்திரேலிய அரசின் பரிசீலனைக்கு முன்வைக்கப்படவுள்ளது. சிட்னிக்கும் மெல்பேர்னுக்கும் இடையில் 40 நிமிடங்களிலும் மெல்பேர்னுக்கும் கன்பராவுக்கும் இடையில் 23 நிமிடங்களிலும், கன்பராவுக்கும் சிட்னிக்கும் இடையில் 14 நிமிடங்களிலும், சிட்னிக்கும் குயீன்ஸ்லாந்துக்கும் இடையில் 37 நிமிடங்களிலும் பயணம் செய்யக்கூடிய வகையிலான இந்த அதிவேக ரயில் சேவையை அவுஸ்திரேலியாவில் நிர்மாணிப்பது ...

Read More »