மக்களின் தேவைகளை சிறப்பான முறையில் நிறைவேற்றுவதற்காக நீதித்துறையின் நேர்மையையும் ஆற்றலையும் மேம்படுத்தி நீதிமன்ற நிருவாகத்தை சிறப்பானதாக்குவதற்கான ஏற்பாடுகளில் நீதியமைச்சுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் ( யூ.எஸ்.எயிட்) உதவிசெய்யவிருப்பதாக சட்டத்துறை மற்றும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
இது விடயத்தில் நீதியமைச்சு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்ட உதவி ஆணைக்குழு, மாகாண சட்டத்தரணிகள் சங்கங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், முக்கியமான அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து யூ.எஸ்.எயிட் பணியாற்றும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Eelamurasu Australia Online News Portal