சிட்னிக்கும் மெல்பேர்னுக்கும் இடையில் 40 நிமிடங்களில் பயணிக்கக்கூடிய Hyperloop Transportation அதிவேக ரயில் சேவை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுகின்றது.
இந்த ரயில் சேவையை அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையில் நிர்மாணிப்பது குறித்த யோசனை மீண்டுமொரு தடவை அவுஸ்திரேலிய அரசின் பரிசீலனைக்கு முன்வைக்கப்படவுள்ளது.
சிட்னிக்கும் மெல்பேர்னுக்கும் இடையில் 40 நிமிடங்களிலும் மெல்பேர்னுக்கும் கன்பராவுக்கும் இடையில் 23 நிமிடங்களிலும், கன்பராவுக்கும் சிட்னிக்கும் இடையில் 14 நிமிடங்களிலும், சிட்னிக்கும் குயீன்ஸ்லாந்துக்கும் இடையில் 37 நிமிடங்களிலும் பயணம் செய்யக்கூடிய வகையிலான இந்த அதிவேக ரயில் சேவையை அவுஸ்திரேலியாவில் நிர்மாணிப்பது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டது.
Eelamurasu Australia Online News Portal