ஊடக சுதந்திரத்தில் சிறிலங்கா முன்னேற்றம்!

எல்லைகளற்ற நிருபர் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக சுதந்திரம் தொடர்பான வருடாந்த சுட்டியில் சிறிலங்கா முன்னேற்றமடைந்துள்ளது.

 

வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, கடந்த 2017 ஆம் ஆண்டில் 141 ஆவது இடத்தில் இருந்து இலங்கை கடந்த 2018 ஆம் ஆண்டில் 131 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த சுட்டியின்படி, உலகில் ஊடக சுதந்திரம் கூடுதலாக உள்ள நாடு நோர்வே ஆகும்.

ஊடக சுதந்திரம் மிகவும் குறைவாகபேணப்படும் நாடாக எரித்திரியாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் இந்தியா 138 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 146 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 139 ஆவது இடத்திலும் உள்ளன. இதேவேளை,  இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியன கீழ் மட்டத்தில் இருக்கும் அதேவேளை, மாலைதீவு 120 ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 118 ஆவது இடத்திலும், நேபாளம் 106 ஆவது இடத்திலும் இருக்கின்ற அதேவேளை, இலங்கையை விட மேலிடத்தில் உள்ளன.

இந்த சுட்டியில் 94 ஆவது இடத்தில் உள்ள பூட்டான் தெற்காசியாவில் ஊடக சுதந்திரத்தை கூடுதலாகப் பேணும் நாடாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.