அரசியலமைப்பின் இறுதி வரைவிலும் ‘ஒருமித்த நாடு’ என்ற சொல் வரும் – சம்பந்தன்

“ஏக்­கிய ராஜ்­ஜிய என்றால் ஒரு­மித்த நாடு என்றே புதிய அர­சியல­மைப்பு வரை­வுக்­கான இடைக்­கால அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது. இறுதி அர­ச­மைப்­பிலும் அது அவ்­வாறே இடம்­பெறும் என்று நம்­பு­கின்றோம். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அதற்­கான உறு­தி­மொ­ழியை வழங்­கி­யுள்ளார்” என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

அர­ச­மைப்பில் ஏக்­கிய ராஜ்­ஜிய என்ற சொல் மூன்று மொழி­க­ளிலும் இருக்கும். அதில் எந்­த­வொரு மாற்­றமும் செய்­யப்­ப­டாது. ஏக்­கிய ராஜ்­ஜி­ய­வுக்கு தமிழில் ஒரு­மித்த நாடு என்ற பதத்தை இணைக்­கு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­ட­போ­திலும் அது ஏற்றுக்கொள்­ளப்­ப­ட­வில்லை’ என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் மூத்த தலை­வர்­களுள் ஒரு­வரும் சபை முதல்­வ­ரு­மான அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­தி­ருந்தார்.

இது தொடர்பில் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தன் கூறுகையில்,

“புதிய அர­ச­மைப்பு வரை­வுக்­கான இடைக்­கால அறிக்­கையில் இது தொடர்பில் தெளி­வாகக் கூறப்­பட்­டுள்­ளது. ஏக்­கிய ராஜ்­ஜிய என்றால் ஒற்­றை­யாட்சி என்ற குழப்பம் இருந்­தது. ஆனால், இடைக்­கால அறிக்­கையில் ஒரு­மித்த நாடு என்று தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

புதிய அர­ச­மைப்­புக்­கான இறுதி வரை­விலும் அதுதான் வரும் என்று நம்­பு­கின்றேன். இந்தச் சொல் தொடர்பில் சட்டச் சிக்கல் வந்­தாலும், இடைக்­கால அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ள­வாறு ஒரு­மித்த நாடு என்ற சொல்லே மேலோங்கும்.

இந்தச் சொல்லை வைத்து தமிழ் மக்­க­ளிலும் சிங்­கள மக்­க­ளிலும் சில தனி நபர்கள் சுய­லாப அர­சியல் செய்­கின்­றார்கள்.

இந்தச் சொல் நாட்டின் மூன்று இன­ மக்­களின் அர­சியல் தீர்­வுடன் சம்­பந்­தப்­பட்ட சொல். நல்­லி­ணக்­கத்­துக்கு மூல கார­ண­மாக அமையும் சொல்.அப்­ப­டிப்­பட்ட முக்­கி­ய­மான சொல்லை வைத்துக் கொண்டு சில்­ல­றைத்­த­ன­மான வேலை­களில் ஈடு­படக் கூடாது.

இந்தச் சில்­லறை வேலை­க­ளுக்கு சில சிங்­கள, தமிழ் ஊட­கங்­க­ளும் துணை­போ­வ­துதான் கவ­லைக்­கு­ரி­யது.

இந்தச் சொல்­லாடல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில், ஏக்கிய ராஜ்ஜியவுக்கு ஒருமித்த நாடு என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்திருந்தார்” என்றார்.