குமரன்

சவேந்திர சில்வா நியமனம் குறித்து மனித உரிமை பேரவையில் கவலை!

சிறிலங்காவின்  இராணுவ தளபதியாக  சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில்  இலங்கை குறித்த முக்கிய குழு கவலை வெளியிட்டுள்ளது கனடா ஜேர்மனி மொன்டிநீக்ரோ வடமசெடோனியா பிரிட்டன் ஆகியநாடுகளே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்த நாடுகளின் சார்பில் பிரிட்டனின் சர்வதேச மனித உரிமைகளிற்கான தூதுவர் ரிட்டா பிரென்ஞ் அறிக்கையை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவின்  புதிய இராணுவதளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவித்து இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கின்றது என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட கரிசனையினை பகிர்ந்துகொள்வதாக ...

Read More »

இரட்டை கோபுரம் தாக்குதல்! 18 வருடங்கள் !

அமெரிக்காவில்   இரட்டை கோபுரம்  தாக்குதல் இடம் பெற்று இன்றுடன்  18 வருடங்கள் காலம் கடந்து விட்டது. அமெரிக்காவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் சுமார் 3,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்ட 9/11 தினத்தின் 18 ஆம் ஆண்டு இன்று  நினைவு கூரப்படுகின்றது. இதே போன்ற ஒரு நாளில் அமெரிக்க நேரப்படி சரியாக காலை 8.45 அளவில் நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு கோபுரத்தின் மீது அல்-கொய்தா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட விமானம் ஒன்று மோதி தாக்குதல் நடத்தியிருந்தது. உலகத்தின் போக்கையே மாற்றி ...

Read More »

ஜெயம் ரவி படத்தில் தேசிய விருது பிரபலங்கள்!

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படத்தில் தேசிய விருது பெற்ற பிரபலங்கள் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘கோமாளி’. பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களின் இயக்குநர் லக்ஷ்மன் படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.  ஜெயம் ரவியின் 25 வது படமான இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பிறகு இயக்குநர் அஹமத் இயக்கும் ...

Read More »

கோமாவில் உயிருக்கு போராடும் தாய்க்கு பிறந்த அழகிய குழந்தை!

மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவினால் கோமா நிலைக்கு சென்ற தாய் அழகிய குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த 25 வயதான கெய்ட்லின் ஸ்டப்ஸ் 32 வார கர்ப்பிணியாக இருந்தபோது, அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார். அவரது மூளையில் ஏராளமான தொற்றுநோய்களும், மூளையில் தொடர்ந்து வரும் இரத்தப்போக்குகள் காரணமாக அவற்றிற்கு எதிராக போராடி வருகிறார். மேலும் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து அவருக்கு ...

Read More »

மொட்டில் நாம் இணையோம் – தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் ‘தாமரை மொட்டு ‘அல்லாத பொதுச் சின்னத்திலேயே போட்டியிடும். அவ்வாறு பொது சின்னத்துக்கு இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் சு.க தனித்து போட்டியிடும் நிலைமையே ஏற்படும்  என்று  சு.கவின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஹெட்டிபொல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத்  குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், கடந்த கால அரசியல் வரலாற்றை நோக்கும் போது கட்சிகள் இணைந்து கூட்டணி ...

Read More »

பல அமைச்சர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத காரணத்தினால் இலங்கை டிரான்பெரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பானது பல அமைச்சர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளது. அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ஹரீன் பெர்னாண்டோ, மனோகணேசன், எம்.எச்.ஏ.ஹலீம், அகிலவிராஜ் காரியவசம், கயந்த கருணாதிலக்க, சஜித் பிரேமதாச மற்றம் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளது.

Read More »

மீண்டும் ஏவுகணை சோதனையை ஆரம்பித்த வடகொரியா!

வடகொரியா கடலை நோக்கி இரு ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தென்கொரிய இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.   ஜூலை மாதத்திற்கு பிறகு வடகொரியா நடத்து ஏவுகணை சோதனை இது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. மேலும், சோதனை நடத்தப்பட்ட ஏவுகணை எந்த வகையைச் சேர்ந்தது என்று உடனடியாக விவரம் எதுவும் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அவ்வப்போது ஏவுகணை சோதனையை நடத்தி வரும் வடகொரியா, நடப்பு மாத இறுதியில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பாக கூறியது. இந் நிலையிலேயே மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனையினை ...

Read More »

19 – மூன்று தலைவர்களின் வியக்கியானங்கள்!

இலங்­கையில் இன்று மூன்று அர­சியல் அதி­கார மையங்­க­ளாக விளங்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ ஆகியோர் கடந்­த­வாரம் நிறை­வேற்றதி­கார ஜனா­தி­பதி பதவி மற்றும் அர­சி­ய­ல­மைப்­புக்­கான 19 ஆவது திருத்தம் குறித்து வெளிப்­ப­டுத்­திய கருத்­துகள், நாடு இன்னும் இரு மாதங்­களில் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்­க­வி­ருக்கும் நிலையில் உன்­னிப்­பாக நோக்­கப்­ப­ட ­வேண்­டி­ய­வை­யாக இருக்­கின்­றன. மூவ­ரையும் பொறுத்­த­வரை ஜனா­தி­பதி ஆட்­சி­முறை தொடர்­பான விவ­கா­ரத்தில் வெவ்­வேறு நிலைப்­பா­டு­களைக் கொண்­டி­ருக்­கின்­ற­போ­திலும், தங்­களின் அர­சியல் எதிர்­காலம் என்று வரும்­போது ...

Read More »

திடீரென சம்பளத்தை குறைத்த காஜல் அகர்வால்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தனது சம்பளத்தை திடீரென குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வாலுக்கு தமிழ், தெலுங்கு என 2  திரைத்துறைகளிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. கவர்ச்சியுடன் கனமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் நடித்த கோமாளி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்து பாரிஸ் பாரிஸ் ரிலீசாக இருக்கிறது. சாதாரணமாக ஒரு தெலுங்கு படத்தின் சம்பளம் என்று பேசினால், அனைத்து சலுகைகளுக்கு பிறகு காஜல் அகர்வால் ...

Read More »

ரணில் – சஜித் தீர்மானமிக்க சந்திப்பு நாளை!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்ட நிலையில், நாளை இடம்பெறும் என, தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்த ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தாம் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் சஜித் பிரேமதாசவுடன் தனியாகச் சந்தித்துப் பேசி வேட்பாளர் தொடர்பாக ஒரு முடிவை எடுக்குமாறு ஐதேக தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இதற்கமைய நேற்றுக் காலை 9 மணியளவில் அலரி மாளிகையில் ...

Read More »