வடகொரியா கடலை நோக்கி இரு ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தென்கொரிய இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜூலை மாதத்திற்கு பிறகு வடகொரியா நடத்து ஏவுகணை சோதனை இது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.
மேலும், சோதனை நடத்தப்பட்ட ஏவுகணை எந்த வகையைச் சேர்ந்தது என்று உடனடியாக விவரம் எதுவும் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அவ்வப்போது ஏவுகணை சோதனையை நடத்தி வரும் வடகொரியா, நடப்பு மாத இறுதியில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பாக கூறியது.
இந் நிலையிலேயே மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனையினை மேற்கொண்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal