மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவினால் கோமா நிலைக்கு சென்ற தாய் அழகிய குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 25 வயதான கெய்ட்லின் ஸ்டப்ஸ் 32 வார கர்ப்பிணியாக இருந்தபோது, அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
அவரது மூளையில் ஏராளமான தொற்றுநோய்களும், மூளையில் தொடர்ந்து வரும் இரத்தப்போக்குகள் காரணமாக அவற்றிற்கு எதிராக போராடி வருகிறார். மேலும் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில் க்வின் என்கிற அழகிய குழந்தை பிறந்தது.
க்வின் தனது வாழ்க்கையின் முதல் மூன்று வாரங்களை என்.என்.ஐ.சி.யுவில் கழித்தார். அதே நேரத்தில் அவரது தாயார் ஐ.சி.யுவில் தனது வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் எதிர்காலம் குறித்து தன்னுடைய நம்பிக்கையினை இழந்த அவருடைய கணவர் ஜொனாதன் வெல்ஷ், உதவிகேட்டு ஆன்லைனில் நிதி திரட்டி வருகிறார்.