ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படத்தில் தேசிய விருது பெற்ற பிரபலங்கள் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள்.
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘கோமாளி’. பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களின் இயக்குநர் லக்ஷ்மன் படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் 25 வது படமான இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதன் பிறகு இயக்குநர் அஹமத் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் தேசிய விருது பெற்ற கலை இயக்குநர்கள் ஸ்ரீராம் ஐயங்ரார் மற்றும் சுஜீத் போன்றோர் இந்த படத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் புகழ்பெற்ற பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவதி உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளனர்.
இந்த படத்தில் முக்கிய காட்சிக்கான அரங்கம் அமைக்கப்பட்டு முக்கிய நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.