குமரன்

நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை!

இந்த வருடத்தில் இடம்பெறவுள்ள இறுதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதனை நாட்டு மக்கள் காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியலாளர் அனுர ஸ்ரீ பெரேரா தெரிவித்துள்ளார். கிரகணம் ஏற்படும்போது, நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்காமல் போவதால், சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும். இதைத்தான் நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்கிறார்கள். கிரகணம் என்பது என்ன?  கிரகணம் என்பது நிழல்தான். நிழலின் விந்தையான விளையாட்டே கிரகணம். சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் ஒரே நேர்கோட்டில் ...

Read More »

இராணுவ சிப்பாயின் கழுத்து துப்பாக்கி கொள்ளை!

வவுனியா போகஸ்வெவ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் இனம் தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய துப்பாக்கியும் பறித்து செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் வவுனியா போகஸ்வெவ பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள 7 ஆவது சிங்க றெயிமென்ட் இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் இன்று காலை தனது பணி முடிந்ததுதும் இராணுவ முகாமை நோக்கி சென்றுள்ளார். இதன்போது இனம் தெரியாத நபர்கள் அவரை வாளால் வெட்டி தாக்கியுள்ளதுடன், அவரது துப்பாக்கியினையும் பறித்து சென்றுள்ளனர். சம்பவத்தில் எம்.ரத்நாயக்க ...

Read More »

உயித்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பலரும் பங்கு பற்றிய நத்தார் ஆராதனை!

நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியர் தேவாலயத்தில் நள்ளிரவு பேராயர் கார்த்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட நத்தார் ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றன. கடந்த ஏப்ரல் 21 உயித்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பலரும் இந்த விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

Read More »

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ்!

மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை டெல்லியில் நடைபெற்ற விழாவில் கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார். 66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் பங்கேற்றுள்ளார். தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார். விருதுகளை பெற்றவர்களுக்கு ...

Read More »

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்த ஒருநாள் போட்டிக்கான கனவு அணிக்கு டோனி கப்டன்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள ஒருநாள் போட்டிக்கான கனவு அணிக்கு மகேந்திரசிங் டோனி கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிக்கு கோலி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் விளையாடிய வீரர்களை கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியை அறிவித்தது. இதில் ஒருநாள் போட்டிக்கான அணிக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் மகேந்திரசிங் டோனி கேப்டனாக நியமித்துள்ளது. தொடக்க வீரர்களாக இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் ஹசிம் அம்லா உள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் ...

Read More »

நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

நியூசிலாந்தில் வைட் தீவில் இம்மாதம் 9 ஆம் திகதி ஏற்பட்ட எரிமலை வெடிப்பில்   உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. எரிமலை வெடிப்பில் காயமடைந்த ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்துள்ளார்கள். எரிமலை வெடிப்பின் போது அந்தத் தீவில் 47 பேர் இருந்தனர். அதில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியப் பயணிகளாவார். 25 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். உயரிழந்தவர்களில் இருவரின் சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இந்நிலையில்,சடலங்களைத் தேடும் பணியைக் காவல் துறை அதிகாரிகள் நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

Read More »

கூட்­ட­மைப்­பி­ன­ருடன் இணைந்தா போட்டி?

அடுத்த பொதுத்தேர்­தலில் நீங்கள் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் இணைந்து போட்­டி­யி­டப்­போ­கின்­றீர்­களா என்று பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ  தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின்  தலை­வரும் நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மனோ கணே­ச­னிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். மனோ கணே­சனின் பிறந்த தினத்தை முன்­னிட்டு அவ­ருக்கு வாழ்த்து தெரி­வித்த போதே பிர­தமர் இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்ளார். தொலை­பே­சியில்  மனோ கணே­ச­னுக்கு வாழ்த்து தெரி­வித்த  பிர­தமர் பொதுத் தேர்­தலில்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் போட்­டி­யிடப் போகின்­றீர்­களா அல்­லது எங்­க­ளுடன்  போட்­டி­யி­டப்­போ­கின்­றீர்­களா? அல்­லது  தனித்து போட்­டி­யி­டப்­போ­கின்­றீர்­களா? என்று  கேள்வி எழுப்­பி­யுள்ளார். இதற்கு பதி­ல­ளித்த   மனோ கணேசன்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன்  ...

Read More »

இன்று முதல் சிறப்பு மோட்டார் ரோந்து நடவடிக்கை!

பண்டிகை காலத்தை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக காவல் துறை  இன்று முதல் கொழும்பில் சிறப்பு மோட்டர் சைக்கிள் ரோந்து நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இந்த 24 மணி நேர ரோந்து நடவடிக்கையில் 200 க்கும் மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகளும் காவல் துறையினர்  ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல் துறை  மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இந்த மோட்டார் ரோந்து நடவடிக்கையானது பொது இடங்கள், மத வழிபாட்டு இடங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு அருகில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை கண்டி மற்றும் ...

Read More »

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: பரிசாக சாதனைத் தொகை அறிவிப்பு!

ஜனவரி 2020-ல் தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கான பரிசுத் தொகை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டு 71 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக (49.1 மில்லியன் அமெரிக்க டாலர்) அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது பரிசுத்தொகை கடந்த தொடரைவிட 13.6% அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் ஆடவர், மகளிர் பிரிவு சாம்பியன்களுக்கு 4.12 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகை என்பது கொஞ்சமாக அதிகரிக்கப்பட்ட தொகையே. மாறாக இறுதிக்கு முந்தைய சுற்றுக்களில் பங்கேற்கும் வீரர்களுக்கு பரிசுத் தொகை கொஞ்சம் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறும் ...

Read More »

ஒன்றுபட்டால் வென்று விடலாம்!

ஒரு சமூ­கத்தின் அபி­வி­ருத்­திக்கு பல்­வேறு கார­ணிகள் உந்­து­சக்­தி­யாக அமை­கின்­றன. இவற்றுள் அச்­ச­மூ­கத்­தி­ன­ரி­டையே காணப்­படும் ஒற்­று­மையும் முக்­கிய கார­ணி­யாக அமை­கின்­றது. சமூ­கத்தின் ஒற்­றுமை சீர்­கு­லையும் போது அபி­வி­ருத்தி தடைப்­ப­டு­வ­தோடு மேலும் பல பாதக விளை­வு­களும் ஏற்­படும் என்­பதும் தெரிந்த ஒரு விட­ய­மே­யாகும். இந்த வகையில் மலை­யக சமூ­கத்தை எடுத்­துக்­கொண்டால் இச்­ச­மூ­கத்­தினரிடையே நிலவும் விரி­சல்கள், கட்சி ரீதி­யான மற்றும் தொழிற்­சங்க ரீதி­யான வேறு­பா­டுகள் உள்­ளிட்ட பலவும் இச்­ச­மூ­கத்­தி­னரின் எழுச்­சிக்கு தடைக்­கல்­லாக இருந்து வரு­வ­தாக புத்­தி­ஜீ­விகள் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர். மேலும் மலை­யக அர­சி­யல்­வா­திகள் இம்­மக்கள் சார்ந்த கோரிக்­கை­களை முன்­வைக்­கும்­போது ...

Read More »