நியூசிலாந்தில் வைட் தீவில் இம்மாதம் 9 ஆம் திகதி ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
எரிமலை வெடிப்பில் காயமடைந்த ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
எரிமலை வெடிப்பின் போது அந்தத் தீவில் 47 பேர் இருந்தனர். அதில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியப் பயணிகளாவார்.
25 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
உயரிழந்தவர்களில் இருவரின் சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இந்நிலையில்,சடலங்களைத் தேடும் பணியைக் காவல் துறை அதிகாரிகள் நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

Eelamurasu Australia Online News Portal