குமரன்

செலவீனங்களை வரி ஊடாக பெற விநோதமான விண்ணப்பங்கள்!

திருமணச்செலவு, குழந்தை பராமரிப்பு, பல்வைத்தியம் போன்ற – வரியில் மீளப்பெறமுடியாத செலவினங்களையெல்லாம் tax return ஊடாக மீளப்பெற்றுக்கொள்வதற்கு சுமார் ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று  ATO-ஆஸ்திரேலிய வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தரவுகள் குறித்து வரித்திணைக்கள துணை ஆணையர் Karen Foat குறிப்பிடும்போது இந்த தகவலை கூறினார். கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2017 ஆம் ஆண்டு இவ்வாறு முறையற்ற கோரிக்கைகள் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். Tax return விண்ணப்பங்களில் தமக்கு கிடைத்த விநோதமான சில சம்பவங்களை அவர் ...

Read More »

ஆஷஸ் என்றால் என்ன?

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1882 ஆம் ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 7 ஓட்டத்தினால் தோற்கடித்தது. இப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 85 ஓட்டங்களை  கூட எடுக்க முடியாத இங்கிலாந்து அணி 77 ஓட்டத்துக்குள் சுருண்டு 7 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. இங்கிலாந்து மண்ணில் அவுஸ்திரேலியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இங்கிலாந்தின் மோசமான ஆட்டத்தை கண்டு வெறுப்படைந்த ‘தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்’ என்ற பத்திரிகை வித்தியாசமான இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், ‘ஓவலில் 1882 ஆம் ...

Read More »

மெல்பேர்னில் காணாமல்போன இலங்கை மாணவன்! 10 நாட்களாகியும் தகவலில்லை

மெல்பேர்னில் காணாமல்போயுள்ள இலங்கை மாணவன் தொடர்பிலான விவரங்கள் எதுவும் பத்துநாட்களுக்கு மேலாகியும் தெரியவராதநிலையில், இலங்கையிலிருந்து மெல்பேர்னுக்கு வந்துள்ள அவரது பெற்றோர் தங்களது மகனை யாராவது கண்டால் தமக்கு தகவல் தரும்படி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மெல்பேர்ன் Deakin பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் கற்கைநெறியை பயின்றுவந்த 21 வயதான Thidinika Prathibha Kulathunga Kulathunga Mudiyanselage என்ற இளைஞரே கடந்த சனிக்கிழமை முதல் இவ்வாறு காணாமல்போயிருப்பவர் ஆவார். மெல்பேர்ன் Craigieburn பகுதிக்கு வேலைக்கு சென்றுவிட்டு காரில் வந்துகொண்டிருக்கும்போது, தான் வீட்டுக்கு செல்வதாக தொலைபேசியில் பேசிய தகப்பனுக்கு தகவல் கூறியபிறகு, அவர் வீடு ...

Read More »

கல்முனை விவகாரம் 10ஆம் திகதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும்!

கல்முனையில் நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள நிர்வாக அலகுப் பிரச்சினைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தீர்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால், இதைப்போன்ற இன்னுமொரு சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்முனை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் நேற்று (31) நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது; சாய்ந்தமருதுக்கு தனியான ...

Read More »

சிறிலங்கா விமானநிலையத்தில் கைதி போல நடத்தப்பட்டேன்!

பாக்கிஸ்தானை சேர்ந்த சுற்றுலாப்பயணியொருவர் உரிய ஆவணங்களை வைத்திருந்த போதிலும் சிறிலங்கா  அதிகாரிகள் தன்னை நாடு கடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானை சேர்ந்த சுற்றுப்பயண காணொளி புளொக்கரான ஹஸ்னைன் மன்சூர் என்பவரே முகநூலில் சிறிலங்காவில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தினை பதிவு செய்துள்ளார். பாக்கிஸ்தானை சேர்ந்த 2000ற்கும் அதிகமானவர்கள் சுற்றுலாப்பயண விசாவில் இலங்கை வந்து அடைக்கலம் கோரியுள்ளனர் என தெரிவித்த சிறிலங்கா அதிகாரிகள் தன்னை திருப்பியனுப்பினர் என தெரிவித்துள்ளார். அதிகாரிகள் தன்னை மலேசியா செல்லும் விமானத்தில் அனுப்பபோவதாக தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில் தங்கியிருப்பதற்கான அனைத்து ...

Read More »

ரஷியாவில் பயங்கர காட்டுத்தீ : அவசரநிலை பிரகடனம்

ரஷியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக பல்லாயிரக்கனக்கான ஏக்கர் நிலப்பரப்புகளில் உள்ள மரங்கள் தீக்கிரையாகின. ரஷிய நாட்டின் சைபீரியா மாகாணத்தில் கிராஸ்னோயார்க் பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த தீயால் 6.7 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசமாகி உள்ளது. அங்கு நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்றால் இந்த காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு அந்த பகுதிகளில் வாழும் மக்கள் ...

Read More »

ஜான்வி காதலில் விழுந்தாரா?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி காதலில் விழுந்ததாக கூறப்படுவதற்கு அவரின் தந்தை போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி இந்தியிலும் முன்னணி நடிகையாக விளங்கினார். தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஜான்வி, குஷி என 2 மகள்கள். கடந்த ஆண்டு துபாயில் நடந்த விபத்தில் ஸ்ரீதேவி காலமானார். போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி தடக் படம் மூலம் நடிகையானார். அந்த படத்தின் கதாநாயகனான இஷான் கட்டாரும் (நடிகர் சாகித் கபூரின் ...

Read More »

பேரம் பேசும் அரசியல் சக்தி! போரின் பின்னர் ஒலித்து வந்துள்ளது!

இலங்கை, இரண்டு தேர்தல்களை எதிர்நோக்கி நிற்கிறது. அதில், இவ்வாண்டின் இறுதிப்பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முதன்மையானது. இந்தத் தேர்தலில், தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி, அரசியல் நிபுணர்கள் ஒவ்வொருவராகச் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இலங்கையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல், தமிழ் மக்களின் தெரிவுகள் அறம் சார்ந்ததாகவோ, மக்கள் நலன் சார்ந்ததாகவோ இருந்ததில்லை. இம்முறையும், அறம் சார்ந்தும் வேலைத்திட்டம் சார்ந்தும் வாக்களிக்கும் வாய்ப்புக் குறைவாகவே உள்ளது. தமிழர்களின் தேர்தல் அரசியல், எப்போதும் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது, ...

Read More »

ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் – குழந்தைகள் உள்பட 34 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் காந்தகார் நெடுஞ்சாலையில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட 34 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் – காந்தகார் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை தற்கொலைப் படையினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அந்த வழியாக சென்ற பஸ்சில் இருந்த குழந்தைகள்  மற்றும் பெண்கள் உள்பட  34 பேர் பலியானார்கள். தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து வருகின்றனர்.இது தலிபான் பயங்கரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More »

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை வெல்லப் போவது யார்?

ஆஷஸ் கோப்பை முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கோப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. 5 டெஸ்ட் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராகவும் கணக்கில் கொள்ளப்படுகிறது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை வென்றது இல்லை. ...

Read More »