குமரன்

வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற நாமல்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை நாமல் வெலிக்கடை சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரியின் அலுவலகத்தில் துமிந்த சில்வா மற்றும் நாமல் ராஜபக்ச சந்தித்து பேசியுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்ஷவுடன் காமினி லொக்குகேவும் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டி-சர்ட்

உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டி-சர்ட்டை விஞ்ஞானிகள் உருவாக்கினர். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழக நிபுணர்கள் அதி நவீன டி-சர்ட்டுகளை தயாரித்துள்ளனர். இவை மின்சாரத்தை எடுத்துக் செல்லும் வகையில் மிக குறைந்த எடையுடன் கூடிய மூலப்பொருட்களால் தயாரிக்கபட்டுள்ளது. இந்த டி.சர்ட் அணியும் போது உடலில் இருக்கும் வெப்பம் அதில் உள்ள மூலப்பொருட்களால் மின்சாரமாக மாறும், அதன் மூலம் மிக சிறிய அளவிலான எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளை இயக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ‘டி சர்ட்டில்’ ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவில் 20 ...

Read More »

25ம் ஆண்டு திருமண நாள் கொண்டாடிய நடிகை ராதா

நடிகை ஸ்ரீப்ரியாவை தொடர்ந்து, நடிகை ராதா, 25ம் ஆண்டு திருமண நாளை, விமரிசையாக கொண்டாடினார். அலைகள் ஓய்வதில்லை படம் மூலம், தமிழ் திரையுலகில், அறிமுகமான நடிகை ராதா, 50; தமிழ், தெலுங்கு, மலையாளம் என, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரி அம்பிகாவும், இவரும் இணைந்து, பல படங்களில் நடித்துள்ளனர். 1981 முதல், 1991 வரை, தமிழ் திரைப்படத்தில் கோலோச்சிய ராதா, 1991ல், ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்து, மும்பையில், செட்டில் ஆனார். தற்போது தனியார், டிவிக்களில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளில், நடுவராக ...

Read More »

ஆற்றல் மிக்க பெண்மணிகள்- அருந்ததி பட்டாச்சார்யா, சந்தா கோச்சார்

பார்ச்சூன் பத்திரிகை, அமெரிக்காவிற்கு வெளியே வணிக உலகில் ஆற்றல் மிக்க பெண்மணிகள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த அருந்ததி பட்டாச்சார்யா, சந்தா கோச்சார், ஷிகா சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அமெரிக்காவின் பார்ச்சூன் பத்திரிகை, நடப்பு 2016-ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கு வெளியே 19 நாடுகளில் வணிக துறையைச் சேர்ந்த 50 ஆற்றல் மிக்க பெண்மணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பேங்கோ சான்டான்டர் நிறுவன தலைவர் அனா போடின் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய அரசு நிறுவனமான பாரத ஸ்டேட் ...

Read More »

உடல் முழுவதும் பச்சை குத்திய அமெரிக்க பெண் கின்னஸ் சாதனை

அமெரிக்காவில் 67 வயதான பெண் ஒருவர் உடல் முழுவதும் பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்த பெண் சாரியேட் கட்டன்பெர்க். 67 வயதான இவர் தனது உடல் முழுவதும் அதாவது 91.5 சதவீதம் பச்சை குத்தியுள்ளார். இதன்மூலம் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சீனியர் சிட்டிசன் ஆன இவர் உடலில் பல டிசைன்களில் பச்சை குத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Read More »

எழுக தமிழை குழப்ப முயற்சி

வடக்கிலிருந்து சிங்களவர்களை வெளியேற்ற துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணத்திலிருந்து அனைத்து சிங்களவர்களையும் விரட்டியடித்து, வடக்கினை தமிழர் தாயக பூமியாக மாற்றிய அமைக்க ஒன்றிணையுமாறு இந்த துண்டு பிரசுரத்தில் கோரப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. ஒரு தரப்பினர் இந்த துண்டு பிரசுரங்களை வட மாகாணம் முழுவதிலும் விநியோகம் செய்துள்ளனர் எனவும் தமிழர் தாயக பூமிக்காக போராடுவோம் என்ற தொனிப் பொருளில் எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று நடத்தப்பட உள்ளது எனவும் கூறியுள்ளது. இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு ...

Read More »

சீனாவில் புதிய ரக பேருந்து அறிமுகம்

சீனா முதன் முறையாக வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய ரக பேருந்து ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும், குறித்த இப் பேருந்தில் 1500 பேர் வரை பயணிக்க முடிவதுடன் இதன் அடியில் வேறு வாகனங்கள் செல்ல முடியும் என்பதே இதன் விசேட அம்சமாகும். அத்துடன், 22m நீளம் , 7.8 m பரப்பளவு மற்றும் 4.8m உயரம் கொண்ட இவ் Teb-1 – “இடைவழி உயர்த்தப்பட்ட பேருந்து”. சீனாவில் அதன் முதல் சோதனை ஓட்டத்தை தொடங்கியது. குறித்த இச் ...

Read More »

கர்நாடக அரசிற்கு ஆதரவாக செயல்படுகிற இந்திய அரசை கண்டித்து முற்றுகைப் போராட்டம்

காவேரி மீதான தமிழர்களின் உரிமையை பறிக்கும் கர்நாடக அரசிற்கு ஆதரவாக செயல்படுகிற, தமிழர்கள் மீது கர்நாடக அரசு நடத்தும் இனவெறி தாக்குதலை தடுக்காமல் மறைமுகமாக ஊக்குவித்து, தமிழர்களின் வளங்களான நிலக்கரி, பெட்ரோலியத்தினை கொள்ளையடித்தும் தமிழர்கள் மீது இனவெறி யுத்தத்தினை நடத்தும் இந்திய அரசை கண்டித்து முற்றுகைப் போராட்டம். தமிழர்களின் உரிமையை, வாழ்வாதாரத்தை, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்திய மோடி அரசும், துணை செய்யும் காங்கிரசும் சனநாயக விரோதமாக, கூட்டாட்சி விரோதமாக , தமிழின விரோதமாக செயல்படுவதை கண்டிப்போம், அம்பலப்படுத்துவோம். சுயமரியாதை மிக்க தோழர்கள் ...

Read More »

தமிழில் பின்னணிகுரல் பேசிய பிரான்ஸ் நடிகை

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வெள்ளைக்கார பெண் வேடத்தில் நடித்து வந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகை ஆண்ட்ரியன். இவரது உறவினர்கள் பாண்டிச்சேரியில் உள்ளனர். அதனால் அடிக்கடி பிரான்சுக்கும், பாண்டிச்சேரிக்கும் பறந்து கொண்டிருப்பார். பிரான்சில் தொலைக்காட்சி தொடர் மற்றும் நாடகங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியன். பாண்டிச்சேரிக்கு வரும்போது தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டு சிறுசிறு வேடங்களில் நடித்தார். தற்போது புதுமுக இயக்குனர் எம்.எஸ்.எஸ் இயக்கும் மேல்நாட்டு மருமகன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கதைப்படி வெளிநாட்டிலிருந்து தமிழ் நாட்டை சுற்றி பார்க்க வரும் ...

Read More »

சிறீலங்காவின் பொறுப்புக்கூறல் விடயத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம்

பொறுப்புக் கூறல் நடவடிக்கையின் போது சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இருக்கும் வெள்ளபடையற்றத் தன்மைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றம் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் இந்த வாரம் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடருக்காக சர்வதேச மன்னிப்புச் சபை எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இறுதிக்கட்ட போரின் போதும் அதற்குப் பின்னரும் சர்வதேச சட்டங்களை மீறும் ...

Read More »