காவேரி மீதான தமிழர்களின் உரிமையை பறிக்கும் கர்நாடக அரசிற்கு ஆதரவாக செயல்படுகிற, தமிழர்கள் மீது கர்நாடக அரசு நடத்தும் இனவெறி தாக்குதலை தடுக்காமல் மறைமுகமாக ஊக்குவித்து, தமிழர்களின் வளங்களான நிலக்கரி, பெட்ரோலியத்தினை கொள்ளையடித்தும் தமிழர்கள் மீது இனவெறி யுத்தத்தினை நடத்தும் இந்திய அரசை கண்டித்து முற்றுகைப் போராட்டம்.
தமிழர்களின் உரிமையை, வாழ்வாதாரத்தை, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்திய மோடி அரசும், துணை செய்யும் காங்கிரசும் சனநாயக விரோதமாக, கூட்டாட்சி விரோதமாக , தமிழின விரோதமாக செயல்படுவதை கண்டிப்போம், அம்பலப்படுத்துவோம்.
சுயமரியாதை மிக்க தோழர்கள் அனைவரும் கைகோர்த்து போராட்டத்தினை பலப்படுத்த வாருங்கள். போராட்டமே நம் மானத்தை உறுதி செய்யும்.வாய்ப்பிருக்கும் தோழர்கள் மட்டுமல்ல, வாய்ப்பற்ற தோழர்களும் பங்கேற்க அணி திரளுங்கள்.
அன்றாடப்பணிகளை விட்டு வெளியேருங்கள். வீதிக்கு வாருங்கள். கையாலாகாத இந்திய அரசை கேள்விக்குள்ளாக்குவோம்.
பாசிச இனவெறி கர்நாடக அரசையும், இந்திய அரசையும் எதிர்த்து போராட களத்திற்கு வாருங்கள்.
இடம் : சாஸ்த்திரி பவன் , சென்னை
தேதி : 14 செப்டம்பர், புதன்கிழமை
காலை 10 மணி
மே பதினேழு இயக்கம்
Eelamurasu Australia Online News Portal