சீனா முதன் முறையாக வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய ரக பேருந்து ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும், குறித்த இப் பேருந்தில் 1500 பேர் வரை பயணிக்க முடிவதுடன் இதன் அடியில் வேறு வாகனங்கள் செல்ல முடியும் என்பதே இதன் விசேட அம்சமாகும்.
அத்துடன், 22m நீளம் , 7.8 m பரப்பளவு மற்றும் 4.8m உயரம் கொண்ட இவ் Teb-1 – “இடைவழி உயர்த்தப்பட்ட பேருந்து”. சீனாவில் அதன் முதல் சோதனை ஓட்டத்தை தொடங்கியது.
குறித்த இச் சேவை மூலம் எதிர்காலத்தில் சீனாவின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என சீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.