குமரன்

மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்!

நன்கொடை திரட்ட நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் நடிகை காஜல் அகர்வால் கலந்துக் கொண்டிருக்கிறார். காஜல் அகர்வால் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் திரைப்படம் வெளியீட்டை எதிர் பார்த்துள்ளது. கமல் ஹாசனுடன் இணைந்து அவர் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18ந்தேதி தொடங்கியது. விரைவில் காஜல் படக்குழுவுடன் இணைய உள்ளார். டாடா கண்சல்டன்சி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மும்பையில் பல்வேறு தலைப்புகளின் கீழ் மாரத்தான் போட்டியை நடத்தி வருகிறது. இதில் இந்தி, தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ...

Read More »

வெடிபொருளின் பின்னணியிலுள்ள அரசியல்வாதியை அம்பலப்படுத்துவேன் – நிஷாந்த

புத்தளம், வனாத்தவில்லு  பிரதேசத்தில்  கிடைக்கப்பெற்ற  வெடிபொருள் விவகாரத்தினை கொழும்பு மாவட்ட  நாடாளுமன்ற  உறுப்பினர்  ஒருவர்  மூடி மறைக்க  முயற்சிகளை  மேற்கொண்டு வருகின்றார். அவர் யார் என்பதை வெகு  விரைவில்  அம்பலப்படுத்துவேன் என  நாடாளுமன்ற   உறுப்பினர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.   பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை   காரியாலயத்தில்  இன்று செவ்வாய்கிழமை  இடம் பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பில்   கலந்துகொண்டு  கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது நாட்டில்  இடம்பெறுகின்ற  ஒவ்வொரு  சம்பவங்களும் தேசிய  பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவே ...

Read More »

தொழில் வாய்ப்புக்கான பரீட்சைகளில் தமிழர்களுக்கு அநீதி!

தொழில் வாய்ப்புக்கான பரீட்சைகளில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், வேலைவாய்ப்பு விடயங்களில் அவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் குற்றம் சுமத்தினார். ஊழல் மோசடி ஆணைக்குழுக்களின் விசாரணைகளும்  அறிக்கைகளும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Read More »

புத்தகங்களுடன் வாழ்வதும் ஓர் அலாதியான அனுபவம்தான்!

புத்தகங்களுடன் வளர்வது மட்டுமல்ல, புத்தகங்களுடன் வாழ்வதும் ஓர் அலாதியான அனுபவம்தான். புத்தகத்தை வாங்குவதும் அதை வீட்டில் அடுக்கி வைத்து வீட்டுக்கு வருபவர்களிடம் `என்னிடம் எவ்வளவு புத்தகங்கள் இருக்கின்றன பாருங்கள்’ என்று சொல்லிக்காட்டி பெருமைகொள்வதும் சுகமான அனுபவம்தான். இன்று பெரும்பாலான வீடுகளில் புத்தகங்களுக்கான அறை என்று பெரிதாக இல்லை… குழந்தைகள் கையில் புத்தகமும் இல்லை. அந்த இடத்தை மொபைல்கள் ஆக்கிரமித்துவிட்டன. இவை, இன்றைய தலைமுறையினருக்கு புத்தகங்களின் அருமையையும் வாசிப்பின் அவசியத்தையும் யாரும் புரியவைக்கவில்லை என்பதையே காட்டுகின்றன. கடந்த இரண்டு வாரமாகச் சென்னையில் நடந்துவரும் புத்தகக் காட்சிக்கு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த தமிழ் குடும்பத்தின் நிலை !

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த நடேசலிங்கம் – பிரியா என்ற ஈழத் தமிழ் குடும்பத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், நாடுகடத்தும் முடிவை திரும்ப பெற முடியாது என அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடையே பேசிய பீட்டர் டட்டன் “அக்குடும்பம் நீதிமன்றத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதில் அனைத்திலுமே அவர்கள் அகதிகள் இல்லை என அறியப்பட்டது” எனக் கூறியுள்ளார். “காணாமல் போதல் சம்பவங்கள் ...

Read More »

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் எண்ணம் எமக்கில்லை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் எண்ணம் எமக்கில்லை என தமிழ் மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.   தமிழ் மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண மத்திய குழுக் கூட்டம், யாழ்ப்பாணத்தில் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமக்கு எந்தவொரு கட்சியையும் பிளவு படச்செய்வதற்கு விருப்பமில்லை. ஈ.பி.ஆர்.எல்.எஃப், கஜேந்திரன் பொன்னம்பலம் ஆகியோர் ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள். எனவே எந்த விதத்திலும் இப்போது இருக்கின்ற கூட்டமைப்பை பிளவுபடுத்தவில்லை. அதேபோல் ...

Read More »

முன்னாள் போராளி கைது!- ஆயுதங்கள் மீட்பு!

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், இரண்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களுடன் கிளிநொச்சி, பளைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கரந்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் அமைந்து பயங்கரவாத புலனாய்வு பிரிவிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 2 துப்பாக்கிகளும் 150 தோட்டாக்களும் மற்றும் பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் சாவு!

அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது ‘பூ’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய். அமெரிக்காவை சேர்ந்த இந்த நாய் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்த ‘பூ’ வின் பெயரில் ‘பேஸ்புக்’ ‘இன்ஸ்ட்ராகிராம்’ போன்றவற்றில் தொடங்கப்பட்ட பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். இந்த சமூக வலைத்தள பக்கங்களில் ‘பூ’ வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினசரி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு அந்த நாய் இறந்தது. 12 வயதான ...

Read More »

2 வாரத்தில் 10 கோடி பார்வையாளர்கள் – ரவுடி பேபி பாடல் சாதனை

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் வெளியான 2 வாரங்களில் யூடியூப்பில் 10 கோடி பார்ரைவயாளர்களை பெற்றுள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் – சாய் பல்லவி நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தில் இடம்பெற்றிருந்த ‘ரவுடி பேபி’  பாடல் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த ஜனவரி 2-ஆம் தேதி யூடிப்பில் வெளியான ...

Read More »

வாள் வெட்டுக் குழுக்களும் வீதிச்சோதனைகளும்!

கடந்த பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாளேந்திய இளைஞர்கள் நடாத்திய தாக்குதலில் சிலர் காயப்பட்டுள்ளார்கள். நாச்சிமார் கோயில் அதிகம் சனப்புழக்கமான ஓர் இடம். யாழ்ப்பாணத்தில் பெருஞ்சாலைகளில் ஒன்றாகிய காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரம். இந்த இடத்தில்தான் தைப்பொங்கல் தினத்தன்று தாக்குதல் நடந்தது. இதற்கு முன் கடந்த புதுவருட தினத்தன்று கொக்குவில் காந்தி சனசமூக நிலையத்தில் வாளேந்திய இளைஞர்கள் அட்டகாசம் செய்துள்ளார்கள். தாங்கள் அங்கு வரப்போவதை முன்னறிவித்து விட்டு வந்திருக்கிறார்கள். அந்த அறிவிப்பே அவர்களுக்கு ...

Read More »