பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் வெளியான 2 வாரங்களில் யூடியூப்பில் 10 கோடி பார்ரைவயாளர்களை பெற்றுள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் – சாய் பல்லவி நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தில் இடம்பெற்றிருந்த ‘ரவுடி பேபி’ பாடல் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.
கடந்த ஜனவரி 2-ஆம் தேதி யூடிப்பில் வெளியான ‘ரவுடி பேபி’ பாடல், சுமார் 2 வாரங்களில் 10 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. அத்துடன் இந்த பாடலுக்கு 10 லட்சம் லைக்சும் கிடைத்துள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில், `இந்த படத்தில் இடம்பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், அனைவருக்கும் நன்றி, உண்மையிலேயே இது மிகப்பெரிய விஷயம், எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பாடகி தீ உடன் தனுஷ் எழுதி பாடிய இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal