நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 26 ஆம் திகதி புதிய நோகர்ரகியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என முன்னதாக தகவல்கள் வெளியான தகவல்களில் கூறப்பட்டது. எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை சீனாவில் வெளியிட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாத இறுதியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவிற்கான அழைப்புகளை வெளியிட்டுள்ளது. வெளியாகியுள்ள அழைப்புகளை தொடர்ந்து எச்எம்டி குளோபல் நிறுவனம் பல்வேறு நோக்கியா 3, நோக்கியா 5 ...
Read More »குமரன்
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்
அவுஸ்ரேலியா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று (14)அறிவிக்கப்படுகிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் வருகிற 23-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ந் திகதியும், 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் மார்ச் 16-ந் திகதியும், 4-வது மற்றும் கடைசி ...
Read More »கால அவகாசம் ஐ.நாவையும் தமிழர்களையும் ஏமாற்றும் நாடகமே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இலங்கை அரசிற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மேலும் இரண்டுவருட கால அவசாகம் வழங்கப்படவேண்டுமா என்பதில் தமிழ் மக்கள் தெளிவுடன் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்கனவே இவ்வாறு இலங்கை அரசிற்கு போதுமாக அளவு கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டதாகம் மேலும் கால அவகாசம் வழங்க முற்படுவதானது இலங்கை அரசாங்கம் ஐ.நாவையும் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காகவே என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர்2015 ஆம் ஆண்டு ...
Read More »ரூ. 2 கோடி வீட்டை பரிசாக கொடுத்த கங்கனா ரனாவத்
இந்தி பட உலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் ரூ. 2 கோடி வீட்டை பரிசாக கொடுத்துள்ளார். இந்தி பட உலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இவரை மிகவும் கவர்ந்தவர் யோகா குரு சூர்ய நாராயண் சிங். கங்கனா ரனாவத் நடிக்க வரும் முன்பு அவரது 18-வது வயதில் மும்பையில் உள்ள ஜுஹூ கடற்கரைக்கு சென்றார். அப்போது, அங்கு யோகா செய்து கொண்டிருந்த சூர்ய நாராயண்சிங்கை பார்த்து வியப்பு அடைந்தார். பின்னர் அவரை சந்தித்து தனக்கு யோகா கற்றுத்தரும்படி கங்கனா கேட்க, அதில் ...
Read More »அரசியலிலிருந்து ஒதுங்கிவிடத் தோன்றுகிறது -அனந்தி
அரசியலில் இருந்து ஒதுங்கிவிடத் தோன்றுமளவிற்கு சில ஊடகங்கள் காழ்ப்புணர்வுடன் மிக மோசமாக எழுதுவதாகத் தெரிவித்துள்ள அனந்தி சசிதரன் ஒருவரை அடிக்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு மோசமாக எழுதாதீர்கள் என்றும் தமிழ் மக்கள் பேரவைக்கு எதிராக தான் எக் கருத்தையும் வெளியிட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் பங்கேற்ற அனந்தி சசிதரனுக்கு மேடையில் பேச இடம் தரவில்லை என அவர் கண்டனம் வெளியிட்டதாகவும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை வைத்து சில அரசியல் கட்சிகள் பிழைப்பு நடத்துவதாகவும் அனந்தி கூறியதாக சில ஊடகங்கள் ...
Read More »இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்: அஜித் வடேகர் கருத்து
இந்தியா – அவுஸ்ரேலியா அணி களுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 23-ம் திகதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் வடேகர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி மிகச்சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அந்த அணி வெற்றி பெறுவது அத்தனை சுலபமான விஷயமல்ல. இந்த தொடர் அவுஸ்ரேலிய அணிக்கு சவால் மிகுந்ததாக இருக்கும். இந்திய அணியில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களான கோலி, சேதேஷ்வர் புஜாரா போன்ற ...
Read More »சாவகச்சேரி தற்கொலை அங்கி! இராணுவப் புலனாய்வாளர்களின் நாடகம்!
கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணையை உடன் நிறுத்துமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் 30ஆம் நாள் சாவகச்சேரி பிள்ளையார் கோவில் வீதியில் வீடொன்றில் சிங்கள பத்திரிகையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்துடன் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு நேரடியாக தொடர்பு உள்ளதென தகவல் வெளியானதை தொடர்ந்து மைத்திரிபால சிறிசேனவால் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதன் ...
Read More »கோப்பி பானம் ஆற்றி தரும் ரோபோ!
ஸ்டார்பக்ஸ் போன்ற பிரபல காபி ஷாப்களில், வாடிக்கையாளர்கள் க்யூவில் நின்று தான் காபி வாங்க வேண்டும். இதனால் நேர விரயமாவதோடு, காபிக்கும் அதிக விலை தரவேண்டியிருக்கிறது. இதை மாற்ற, ரோபோவை காபி தயாரித்து பரிமாற பயன்படுத்தினால் என்ன என, நினைத்தார் அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த ஹென்றி ஹ்யூ. இந்த யோசனையை ரசித்த இடர் நிதி முதலீட்டாளர்கள் சிலர், ஹென்றிக்கு ஒரு லட்சம் டாலர் வரை முதலீடு தந்தனர். அதைவைத்து மிட்சுபிசி 6-ஆக்சிஸ் ரோபோ ஒன்றை வாங்கி அதற்கு காபி தயாரிக்கும் மென்பொருள் நிரல்களை ...
Read More »காஷ்மீர் படத்தில் காஷ்மீர் பொண்ணு
மணிரத்னம் இயக்கி வரும் படம் காற்று வெளியிடை. இதில் கார்த்தி, அதிதிராவ், ஆர்.ஜே.பாலாஜி, விபின் சர்மா உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார் கன்னட படமான யூடேர்ன் படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத். கார்த்தியை ஒரு தலையாக காதலிக்கும் கேரக்டர் என்கிறார்கள். இந்தப் படத்தின் கதை காஷ்மீரில் நடக்கிறது. அதிதியும், கார்த்தியும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக நடிக்கிறார்கள். இதில் காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண் கேரக்டர் இருக்கிறது. இதில் நடிக்க காஷ்மீரில் பிறந்த வளர்ந்த பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கருதிய ...
Read More »அவுஸ்ரேலியாவில் ரணிலுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்த தயாராகும் புலம்பெயர் சமூகங்கள்!
சிறீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை நடத்த தமிழ்சி, ங்கள புலம்பெயர் அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் செல்கின்றார். தமிழ் மக்களின் தேவைகளை ரணில் அரசாங்கம் பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாகக் கூறி புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்பு ஒன்று எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தி சிங்கள புலம்பெயர் சமூகமொன்றும் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal