காஷ்மீர் படத்தில் காஷ்மீர் பொண்ணு

மணிரத்னம் இயக்கி வரும் படம் காற்று வெளியிடை. இதில் கார்த்தி, அதிதிராவ், ஆர்.ஜே.பாலாஜி, விபின் சர்மா உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார் கன்னட படமான யூடேர்ன் படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத். கார்த்தியை ஒரு தலையாக காதலிக்கும் கேரக்டர் என்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதை காஷ்மீரில் நடக்கிறது. அதிதியும், கார்த்தியும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக நடிக்கிறார்கள். இதில் காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண் கேரக்டர் இருக்கிறது. இதில் நடிக்க காஷ்மீரில் பிறந்த வளர்ந்த பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கருதிய மணிரத்னம் ஸ்ரத்தா ஸ்ரீநாத்தை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார்.

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ஸ்ரத்தா பிறந்தது வளர்ந்தது எல்லாமே காஷ்மீரில் உள்ள உத்தம்பூரில். அப்பா ராணுவ அதிகாரி, அம்மா ராணுவ பள்ளி ஆசிரியை என்பதால் முழுமையான காஷ்மீர் கலாச்சாரத்தில் வளர்ந்தவர் ஷரத்தா. யூடேர்ன் படத்திற்கு முன்னதாக கோஹினூர் என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார் ஸ்ரத்தா. தமிழில் தற்போது காற்று வெளியிடை தவிர இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி படங்களில் நடித்து வருகிறார்