குமரன்

பீட்ஸா போட்டி: அவுஸ்திரேலியா உணவகம் முதலிடம்!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னின் பிரபல பீட்ஸா உணவகம் தயாரித்த பீட்ஸா, உலகளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது. இந்த பீட்சாவினை “400 Gradi” பிரபல பீட்ஸா உணவகம் தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் உலகம் எங்கிலும் இருந்து பல்லாயிரம் உணவங்கள் இத்தாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கலந்து கொண்டிருந்தன. இருப்பினும் இப்போட்டியில் கலந்து கொண்ட உணவங்கள் தயாரித்த பீட்ஸாவினை பின்தள்ளி 400 Gradi மெல்பேர்ன் பீட்ஸா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Read More »

அமெரிக்க வீரர்களின் உடைமைகளை திரும்ப வழங்கியது வடகொரியா!

கொரியப்போரின் போது உயிர்நீத்த அமெரிக்க வீரர்களில் 55 பேர் பயன்படுத்திய உடைமைகளை வடகொரியா அமெரிக்காவுக்கு திரும்ப கொடுத்துள்ளது. கடந்த 1950-53 ஆண்டுகளில் நடந்த கொரிய போரின் போது சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். போருக்கு பின்னர் கொரியா இரண்டாக உடைந்தது. தென்கொரியா அமெரிக்காவுக்கு நெருக்கமாகவும், வடகொரியா ரஷியா மற்றும் சீனாவுக்கு நெருக்கமானதாகவும் மாறிப்போனது. அமெரிக்கா – வடகொரியா இடையே பல ஆண்டுகளாக இருந்த பகை கடந்த ஜூன் மாதம் டிரம்ப் – கிம் சந்திப்பை அடுத்து குறைந்துள்ளது. சிங்கப்பூரில் நடந்த ...

Read More »

திரைப் பார்வை: பிரதி மாறிய பிம்பம்! – தடக் (இந்தி)

ஒரே கதை வெவ்வேறு இந்திய மொழிகளில், வெவ்வேறு மாற்றங்களுடன் வருவது இந்திய சினிமாவுக்குப் புதிதல்ல. பாசில் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் ‘அந்நியத்துபிராவு’. அது தமிழில் ‘காதலுக்கு மரியாதை’, தெலுங்கில் ‘நேனு பிரேமிச்துன்னானு’, இந்தியில் ‘டோலி சஜாகி ரக்னா’, கன்னடத்தில் ‘ப்ரீத்திகாகி’ என மறு ஆக்கம் செய்யப்பட்டுப் பெரு வெற்றி கண்டது. இது பழைய உதாரணம் என்றால், இன்று பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் 2004-ல் வெளிவந்த ‘காதல்’ படத்தை புதிய உதாரணமாகக் கொள்ளலாம். திரைப்பட வணிகம் என்பது நேரடியாக, மொழிமாற்றுப் படமாக, மறு ஆக்கமாக ...

Read More »

இந்தியாவுடன் இணைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ரணிலிடம் கோரிக்கை!

வடக்கு வீட்­டுத்­திட்டம் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் இந்­திய அர­சுடன் உட­ன­டி­யாக பேச்­சு­வார்த்தை நடத்தி இந்­திய வீ­ட­மைப்பு திட்­டத்­தையே முன்­னெ­டுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. வடக்கில் சீனா முன்­னெ­டுக்­க­வுள்ள வீட­மைப்புத் திட்­டத்தை அதே பெறு­ம­தியில் இந்­தியா முன்­னெ­டுப்­ப­தாக இந்­திய அர­சாங்கம் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு வாக்­கு­றுதி கொடுத்­துள்­ள­தா­கவும் எனவே அதனை தாம் பிர­த­ம­ருக்கு அறி­வித்­துள்­ள­தா­கவும் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. இதே­வேளை ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் 25 ஆயிரம் வீட்­டுத்­திட்­டத்தை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தவும் கூட்­ட­மைப்பு வலியு­றுத்­தி­யுள்­ளது. வடக்கில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கான ...

Read More »

பயணிகளுக்கான வரைபட சேவை!

இணையத்தில் வரைபடம் என்றதும் கூகுள் வரைபடம்தான் நினைவுக்கு வரும். கூகுள் வரைபடம் தவிர மேலும் பல வரைபட சேவைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சைஜிக் டிராவல் மேப்ஸ். பயணிகளுக்குத் தேவையான தங்குமிடங்கள், முக்கிய இடங்கள், ஹோட்டல்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றைக் கச்சிதமாக அடையாளம் காட்டுகிறது. இந்தத் தளத்தின் மூலம் கூடுதலான தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். தேவையெனில் இதன் மூலமே பயணங்களைத் திட்டமிடலாம். தேடல் வசதியும் இருக்கிறது. பயனாளிகளின் இருப்பிடத்தை உணர்ந்து தளத்தில் நுழைந்ததுமே அவர்களுடைய வசிப்பிடப் பகுதி வரைபடத்தில் முன்னிறுத்தப்படுவது சிறப்பு. ‘ஓபன் ஸ்டிரீட் மேப்’ ...

Read More »

வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்ய அவுஸ்திரேலியா பயணமான குற்றப் புலனாய்வுக் குழு!

ஊடகவியலாளர் கீத் நொயாரிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களக் குழு ஒன்று அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவல் துறை பரிசோதகர் மற்றும் உபகாவல் துறை பரிசோதகர் ஆகியோர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் ஒருவாரம் தங்கியிருந்து மெல்போர்னில் உள்ள ஊடகவியலாளர் கீத் நொயரிடம் வாக்கு மூலம் பெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கீத்நொயார் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர், இராணுவ தலைமை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் ஓய்வு பெற்ற அமல் ...

Read More »

“தற்கொலை செய்துகொள்வதைவிட வாழ்க்கையை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது எவ்வளவு மகத்தானது”!

வின்சென்ட் வான் கா  தன் அண்ணனின் இறுதி ஊர்வலத்தில் அதிகபட்ச ஓவியர்களையும் நண்பர்களையும் பங்கெடுக்கச் செய்யவேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்தார் தியோ. மனம் வான் காவையே நினைத்துக் கொண்டிருந்தது. “தற்கொலை செய்துகொள்வதைவிட வாழ்க்கையை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது எவ்வளவு மகத்தானது”  என்று எழுதிய வான் கா, தற்கொலையின்மூலமே மரணத்தைத் தேடிக்கொண்டார். வான் காவின் சவப்பெட்டியைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த ஓவியங்களில் வண்ணத்தின் ஈரம்கூட காயவில்லை. வான் காவுக்கு விருப்பமான சூரிய காந்திப் பூக்களால் சவப்பெட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரை அமைதிப்படுத்தும் கான்வாஸும், மடிப்பு ஸ்டூலும், திறந்திருந்த வண்ணக்குழம்புகளும் அருகில் ...

Read More »

பௌத்த துற­வி­க­ளான தாய்­லாந்து குகைச்சிறார்கள்!

தாய்லாந்து குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் தற்காலிகத் துறவறத்தை மேற்கொண்டுள்ளனர். தாய்லாந்தில் உள்ள தாம் லுங் குகைக்கு ஜூன் மாதம் 23-ஆம் திகதி 12 கால்பந்து விளையாடும் சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் கடும்வெள்ளம் ஏற்பட்டது. இதனால் குகைக்குள், சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்பது நாட்களுக்குப் பின்னர், கடந்த மாதம் 2-ம் திகதி அவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்தச் செய்தி பரபரப்பானது. அவர்களை எப்படி மீட்பது என்று விவாதிக்கப்பட்டது. இதற்காக அமெரிக்கா, ...

Read More »

யாழ். குடா­நாட்­டில் 14,000 படை­யி­னர் உள்ளனராம்!

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் தற்­போது சுமார் 14 ஆயி­ரம் இரா­ணு­வத்­தி­னர் நிலை கொண்­டுள்­ள­னர் என்று யாழ்ப்­பா­ணம் தலை­மை­ய­கக் கட்­ட­ளைத் தள­பதி மேஜர் ஜென­ரல் தர்­சன ஹெட்­டி­ய­ராட்சி தெரி­வித்­துள்­ளார். குடா­நாட்­டில் தற்­போது 51, 52, 55 ஆகிய 3 டிவி­சன்­களே நிலை­கொண்­டுள்­ள­ னர். அவற்­றைச் சேர்ந்த சுமார் 14 ஆயி­ரம் படை­யி­னர் தற்­போது எனது கட்­டுப்­பாட்­டில் உள்­ள­னர் என்று அவர் கூறி­யுள்­ளார். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்­பா­ணப் படை­க­ளின் கட்­ட­ளைத் தள­ப­தி­யா­கப் பதி­யேற்ற பின்­னர் குடா­நாட்­டில் படைக்­கு­றைப்பு நடக்­க­வில்லை என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுளார். 2009ஆம் ஆண்டு ...

Read More »

தேவதை! மனதை வென்றெடுத்த நைஜீரிய சிறுமி

இன்ஸ்டாகிராமில் `உலகிலேயே அழகான சிறுமி’ என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார் நைஜீரியா சிறுமி ஜரே. குழந்தைகள் என்றாலே அழகுதான். அதுவும் கைதேர்ந்த புகைப்பட கலைஞரின் கேமராவில் குழந்தைகளின் அழகு இருமடங்காகிவிடும். அப்படிதான் ஜரேவை படம்பிடித்து இன்ஸ்டாகிராம் ஸ்டாராக்கிவிட்டார் `மோஃபே’ என்கிற புகைப்படக் கலைஞர். நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகரத்தைச் சேர்ந்த பெண் புகைப்பட கலைஞர் மோஃபே, 5 வயது சிறுமி ஜரேவை புகைப்படம் எடுத்து  `இவள் மனித இனம்தான்… தேவதையும்கூட’ என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். ஜரேவின் புகைப்படம் பகிரப்பட்ட சில நொடிகளில் 10,000 லைக்ஸ். `ஜரேவின் ...

Read More »